சென்னை: கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில்,  பள்ளிகள் திறப்பு எப்போது?  என்பது குறித்த அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்  அளித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் அக்னி வெயில் கொளுத்தி வரும் நிலையில், ஜுன் 1ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. தற்போது கொளுத்தும் வெயில் காரணமாக பொதுமக்களே வீட்டை விட்டு வெளியே வர அஞ்சும் நிலையில்,  பள்ளிகள் திறக்கப்பட்டால் குழந்தைகளும் வெயிலின் தாக்கத்திற்கு ஆளாக நேரிடும், அதனால் பள்ளி திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என பெற்றோர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். அதுபோல, தனியார் பள்ளி கூட்டமைப்பினரும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இநத் நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில்   செய்தியாளர்களை சந்தித்த  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் குறித்து வானிலை ஆய்வு மையத்திடம் அறிக்கை கேட்டுள்ளோம்.  வானிலை மையத்தின் அறிக்கை அடிப்படையில் முதலமைச்சரிடம் ஆலோசித்த பின் பள்ளி திறப்பு தேதி குறித்து அறிவிப்போம் என்று கூறியவர், பள்ளிகள் திறந்ததும் காலை உணவு திட்டம் தொடரும்.  காலை உணவு, மதிய உணவு உள்ளிட்ட திட்டங்கள் இந்த ஆட்சியில் மேம்படுத்தப்பட்டு தொடரும் என்றார்.

மாணவர்கள் சம்பந்தப்பட்ட எந்த திட்டத்தையும் நிறுத்த மாட்டோம் என்றவர்,  பள்ளி மாணவர்களுக்கான உணவு தரமாக இல்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றவர், பள்ளி மாணவர்கள் இடையே சாதிய மோதலை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது பாலியல்  சம்பவங்களை தடுக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருவதாக கூறியவர்,  பள்ளிகளில் போக்சோ சட்டங்கள் குறித்து அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றார்.

[youtube-feed feed=1]