பாளையங்கோட்டை: தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய திமுக ஆதரவாளரான மென்பொறியாளர் ஜேம்ஸ் என்பவரை பாளையங்கோட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த திமுக ஆட்சியில், முதல்வர் மற்றும் ஆட்சியாளர்களின்நடவடிக்கைளை விமர்சித்து கருத்து தெரிவிக்கும் ஊடகவியலாளர்கள், சமுக ஆர்வலர்களை காவல்துறை நள்ளிரவு வீடு தேடி சென்று கைது செய்து வந்த நிலையில், தற்போதைய தவெக அரசும், அதே நடவடிக்கையும் மேற்கொண்டுள்ளது. இதுபோன்ற மக்கள் விரோத நடவடிக்கைகளால், திமுக அரசு மக்களால் வெறுக்கப்பட்ட நிலையில், தவெக அரசும் திமுக பாணியை மேற்கொண்டு இருப்பது,. பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களை பரப்பியதாக மென்பொருள் பொறியாளர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நெல்லையில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் ஜேம்ஸ். மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வரும் இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சையில் இருந்துள்ளார். பின்னர் சிகிச்சை முடிந்து மருத்துவமனையிலிருந்து வெளியே வந்தவர், கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்து தொடர்ந்து தவறான மற்றும் அவதூறான கருத்துக்களைப் பதிவிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
மதம், மொழி மற்றும் இனம் ஆகியவற்றுடன் தொடர்புபடுத்தி முதலமைச்சர் குறித்து அவதூறு கருத்துக்களைப் பதிவிட்டதோடு மட்டுமல்லாமல், சமூக வலைதளங்களில் தான் பேசக்கூடிய நபர்களிடமும் அவர் தொடர்ந்து அவதூறான முறையில் பேசி வந்ததாகத் தெரிகிறது. மேலும், கைது செய்யப்பட்டுள்ள இந்த நபர் திமுகவின் ஆதரவாளராகச் செயல்பட்டு வந்தவர் என்றும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, நேற்று இரவு பாளையங்கோட்டை போலீசார் அவரைப் பிடித்துக் கைது செய்தனர். அவர் மீது முதலமைச்சர் குறித்து அவதூறாகப் பேசியது, மதம், இனம் மற்றும் மொழி தொடர்பாகத் தவறான கருத்துக்களைப் பதிவிட்டது உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்பொழுது அவர் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
[youtube-feed feed=1]