சென்னை: என்கணவரை ஏமாற்றி எனக்கே தெரியாமல் எனது மகளின் உடலை காவல்துறையினர் எரித்துள்ளனர் என தமிழ்நாட்டை உலுக்கியுள்ள பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட கோவை சிறுமியின் தாயார் பரபரப்பு குற்றச்சாட்டுக்களை சுமத்தி உள்ளார்.
மனது மகள் மரணத்துக்கு உரிய தண்டனை கிடைத்த பிறகே உடலை வாங்குவேன் என்று தெரிவித்திருந்தேன். ஆனால், காவல்துறையினர், எனக்கே தெரியாமல் என் கணவரிடம் கையெழுத்து வாங்கி, மருத்துவமனையின் பின்வாசல் வழியாக உடலை எடுத்துச் சென்று எரித்துள்ளனர் என பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார்.

கோவையில் சிறுமி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், எனக்கு நிதி வேண்டாம், என் குழந்தைக்கு நீதி வேண்டும் என்று சிறுமியின் தாயார் பவித்ரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோவை சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், சிறுமியின் தாயார் பவித்ரா செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அவர் கூறுகையில், “எனக்கே தெரியாமல் என் குழந்தையின் உடலை வாங்கிச் சென்று, என் சம்மதம் இல்லாமல் எரித்துள்ளனர். உடலை வாங்க என்னை அனுமதிக்கவில்லை. பிரேத பரிசோதனை முடிந்து உடலை ஒப்படைத்ததும் எனக்கு தெரியாது.
உரிய தண்டனை கிடைத்த பிறகே உடலை வாங்குவேன் என்று தெரிவித்திருந்தேன். ஆனால், எனக்கே தெரியாமல் என் கணவரிடம் கையெழுத்து வாங்கி உடலை எடுத்துச் சென்றுள்ளனர். என் குழந்தையின் உடலை என் கண்ணில்கூட காட்டவில்லை. யார் மீது குற்றம் என கண்டுபிடிக்க குழந்தையின் உடல் இல்லை. மருத்துவமனையில் என் கணவரின் மனதை மாற்றி குழந்தையின் உடலை வாங்கிச் சென்றுள்ளனர்.
உடலை ஒப்படைத்ததில் ஒருதலைப்பட்சமான நடவடிக்கை நடந்துள்ளது. உடலை எரிப்பதில் ஏன் அவசரம் காட்டப்பட்டது? அத்துடன், வழக்கை திசைதிருப்பவே “என் மீது தேவையற்ற வதந்திகள் அவதூறு பரப்பப்படுகிறது. எனக்கு நிதி வேண்டாம், நீதி வேண்டும். கொலையாளிக்கு கொடுக்கும் தண்டனையை பார்த்து இனி யாரும் இதுபோன்ற தவறு செய்யக் கூடாது. என் குழந்தை அனு அனுவாக இறந்துள்ளது; அதேபோல் கொலையாளிகளுக்கும் தண்டனை கிடைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் முதலமைச்சர் தங்களிடம் பேசியதாகவும், விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நேரில் சந்திப்பதாகவும் கூறியதாகவும் தெரிவித்த பவித்ரா, கொலையாளி கார்த்தியுடன் இருந்த பெண்ணுக்கும் இந்த கொலை சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகவும், அந்த பெண்ணிடமும் காவல்துறை விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார். அதேபோல், எனக்கும் கார்த்திக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. சம்பவத்திற்கு முன் அவர் பெயரைக் கூட எனக்கு தெரியாது. மது போதையில் இருந்தேன் என்று தவறாக கூறுகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]