திருச்சி: திருச்சியில் சிகிச்சைக்கு வந்த நர்சிங் மாணவி உயிரிழப்பு தொடர்பாக உயிரிழந்த மாணவியின் பெற்றோர், உறவினர்கள், பொதுமக்கள் என பலரும் திரண்டு போராட்டம் நடத்தியதை தொடர்ந்து, இந்த மரணம் குறித்து விசாரிக்க விசாரணை குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டைய சேர்ந்த பயிற்சி நர்சிங் மாணவி சீதாலட்சுமி என்பவர் மூக்கு வலி என திருச்சி அரசு மருத்துவமனைக்கு வந்தார். அவர் உள்சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்ட நிலையில், திடீரென உயிரிழந்தார். இது சலசலப்பை ஏற்படுத்தியது. மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக சக மாணவிகள் புகார் எழுப்பியுள்ளனர். மேலும், தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, மாணவியுடன் படித்துவநத சக செவிலியர்கள் காலை முதலே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், உயிரிழந்த மாணவியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் அவர்களுடன் சர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சக மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுட்ட மாணவிகளிடம் அமைச்சர் ரமேஷ் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, செவிலிய மாணவி மரணம் தொடர்பாக சிறப்பு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும் என அமைச்சர் ரமேஷ் செவிலிய மாணவிகளிடம் உறுதி அளித்தார். திருச்சி அரசு மருத்துவமனையில் மாணவிக்கு அளித்த சிகிச்சையில் தவறு நடந்து இருந்தால் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என அறித்தார்.
இதையடுத்து, மாணவிகளின் புகார்களை எழுதி வாங்கியதுடன், தேவையான நடவடிக்கை எடுப்பதாக உத்தரவாதம் அளித்தார். இதனால், சாலை மறியலில் ஈடுபட்ட செவிலிய மாணவிகள் போராட்டத்தை கைவிட்டனர்.
இதைத்தொடர்ந்து , திருச்சி அரசு மருத்துவமனையில் செவிலிய மாணவி உயிரிழந்த விவகாரத்தில் தமிழக சுகாதாரத்துறை விசாரணைக்குழு அமைத்துள்ளது. புகார் குறித்து விசாரிக்க மருத்துவர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் பாஸ்கர் தலைமையில் 3 மருத்துவர்கள் அடங்கிய குழு நியமனம் செய்யப்பட்டுள்ளன.
[youtube-feed feed=1]