சென்னை:  முந்தைய திமுக அரசால் பல்வேறு வழக்குகள் போடப்பட்டு குண்டர் சட்​டத்​தில் சிறை​யில் அடைக்​கப்​பட்ட சவுக்கு சங்​கர் மீதான குண்டர் சட்டத்தை விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு ரத்து செய்த நிலையில்,  சிறை​யில் இருந்து சவுக்கு சங்கர் விடுக்கப்பட்டார். இதையடுத்து, அவர்  முதல்​வர் விஜய்க்கு நன்றி தெரி​வித்​தார்.

 பிரபல யூடியூபரு​ம், சவுக்கு மீடியா தலைமை செயல் அதி​காரி​யும், சவுக்கு சங்​கர்,  கடந்த திமுக ஆட்சியின்போது, ஆட்சியாளர்கள் குறித்து  பல்வேறு தகவல்களை தனது ஊடகத்தில் வெளியிட்டு வந்தார். மேலும் முதல்வர ஸ்டாலின் குடும்பம் குறித்தும், கட்சியினரின் ஊழல்கள் குறித்து தொடர்ந்து செய்திகள் வெளியிட்டார். இதனால், அவரை ஒடுக்க, காவல்துறை  மற்றும் கட்சியினர் கொண்டு பல்வேறு புகார்கள் கொடுக்கப்பட்டு,  அடுத்தடுத்து கைது  நடவடிக்கைகள் தொடர்ந்தன.  மேலும் அவர்மீது சென்னை  மாநகராக காவல்ஆணையராக இருந்த அருண் உத்தரவின்பேரில் போடப்பட்ட குண்டர் சட்டமும் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. இருந்தாலும், அவரை சிறையில் வைத்து கொடுமை படுத்துவதில் தீவிரமாக இருந்த திமுக அரசு,  கடந்த ஏப்​.9-ம் தேதி  அவரை மீண்டும் குண்​டர் சட்​டத்​தில் சிறை​யில் அடைத்தது.

இந்த நிலையில்,  புதிய அரசு அமைந்​துள்ள நிலை​யில், சவுக்கு சங்​கர் மீதான குண்​டர் சட்​டத்தை தமிழக அரசு கடந்த புதன்​கிழமை (20ந்தேதி)  ரத்து செய்து உத்​தர​விட்​டது. இதையடுத்​து, சவுக்கு சங்​கர் சிறை​யில் இருந்து  விடுவிக்​கப்​பட்​டார்.

 புழல் சிறையில் இருந்து சவுக்கு சங்கர்  விடுதலை செய்யப்பட்டார். விடுதலையை அறிந்து ஆதரவாளர்களும், நண்பர்களும் சிறை வாசலில் காத்திருந்து அவரை உற்சாகத்துடன் வரவேற்றனர்.  சிறையில் இருந்து விடுதலையான சவுக்கு சங்கர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது;

யாரை வேண்டுமானாலும் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன். முதல்வர் விஜய் சந்திக்க அழைப்பு விடுத்தால் நான் சந்திக்க தயாராக இருக்கிறேன்.

திமுக போல ஒரு கொடூர மனது கொண்ட இனி எந்த காலத்திலும் இருக்க முடியாது. தமிழகத்தில் இதற்கு முன்பு எவ்வளவோ முதல்வர்கள் ஆண்டு இருக்கிறார்கள். கொஞ்சம் குறைவாக திட்டுமாறு ஊடகங்களிடம் கெஞ்சுவார்கள். ஆனால் எதிர்த்து பேசும் ஊடங்களையும், ஊடகத்தில் பணியாற்றுபவர்களையும் சிறையில் தள்ளும் கொடுங்கோல் அரசாங்கம் திமுகவை தவிர வேறு எந்த அரசும் கிடையாது

.ஊடகங்களில் வரும் சின்ன, சின்ன விமர்சனங்களையும் முதல்வர் விஜய் கவனத்தில் கொண்டு சில திருத்தங்களை செய்திருக்கிறார் என்பதை அவரது செயல்பாடுகளில் இருந்து நான் பார்க்க முடிகிறது. தமிழகத்தில் தற்போது கூட்டணி ஆட்சி என்பதால் ஜனநாயகம் மேலும் இருக்கும். விஜய்க்கு தெரியாமல் போலீசார் ஏதேனும் நெருக்கடிகளில் ஈடுபட்டால்கூட அமைச்சரவையில் இடம்பெற்று உள்ள கூட்டணிக்கட்சிகளே விஜயிடம் சுட்டிக்காட்டும் என்பதால் தமிழகத்தில் ஊடக சுதந்திரம் வலுவாக இருக்கும்.

திமுகவை மக்​களே தூக்கி எறிந்து விட்​டனர். கொளத்​தூரில் மு.க.ஸ்​டா​லினை தோல்​வி​யுற செய்​ததன் மூலம், மக்​கள் அற்​புத​மான தீர்ப்பை வழங்​கி​யுள்​ளனர். வழக்​க​மாக ஆலோ​சனை வாரி​யத்​துக்கு சென்று ஆஜரான பிறகு, குண்​டர் தடுப்​புச் சட்​டத்தை ரத்து செய்​தால், அந்த உத்​தரவு சிறைக்கு வந்து சேர 10 நாட்​களுக்கு மேல் ஆகும். என் விவ​காரத்​தில் கடந்த திங்​கட்​கிழமை  (மே 18ந்தேதி) ஆலோ​சனை வாரி​யத்​துக்கு முன்பு ஆஜரானேன். தொடர்ந்து புதன்​கிழமை (மே 20ந்தேதி)  தமிழக அரசு குண்​டர் தடுப்பு சட்​டத்தை ரத்து செய்​து, அதற்​கான அரசாணையை சிறைக்கு அனுப்​பியது. உடனே நான் சிறை​யில் இருந்து விடு​விக்​கப்​பட்​டேன்.

முதல்​வர் விஜய்யே இவ்​விவ​காரத்​தில் தலை​யிட்​ட​தால் இது சாத்​தி​ய​மானது. இதற்​காக முதல்​வர் விஜய்க்​கும், நீதி​மன்​றங்​களுக்​கும் நன்​றி.

இவ்​வாறு ​ கூறி​னார்​.

[youtube-feed feed=1]