சென்னை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவராக கு.ப. கிருஷ்ணனை நியமித்து, முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே தேர்தலில் போட்டியிடாத மற்றும் அரசு அதிகாரிகள் அல்லாத சிலரை தனது அரசு தனிச்செயலாளர்களாக நியமனம் செய்துள்ள முதல்வர் விஜய், தற்போது தோர்தலில் தோல்வி அடைந்த முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணனுக்க வாரிய தலைவர் பதவி வழங்கி உள்ளார்.

லால்குடி சட்டமன்றத் தொகுதியில் தவெக சார்பில் களமிறக்கப்பட்டவர் குப.கிருஷ்ணன். இவர் ஏற்கனவேஅதிமுக, திமுகவில் இருந்து வந்த நிலையில்,ச மீபத்தில் தவெகவில் இணைந்தார். இவருக்கு லால்குடி தொகுதி ஒதுக்கப்பட்டது.
இந்த தேர்தலில், அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ் மார்ட்டினிடம் தோல்வி அடைந்தார். கழகம் (அதிமுக) சார்பில் போட்டியிட்ட லீமா ரோஸ், தவெக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணனை 2,739 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்தநிலையில், கு.ப.கிருஷ்ணனுக்குவாரிய தலைவர் பதவி வழங்கி கவுரவித்துள்ளார் முதல்வர் விஜய்.
இதுதொடர்பாக அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ஏழை எளிய மக்களின் வாழ்விடங்களின் மேம்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் குடியிருப்புகளை உருவாக்குதல், உறைவிடங்களில் மறுகுடியமர்வு செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் இன்று தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் பல்வேறு நலத்திட்டங்களை மேற்கொள்வதற்கு, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் தலைவராக கு.பா. கிருஷ்ணனை நியமனம் செய்து ஆணையிட்டுள்ளார்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கு.ப.கிருஷ்ணன்?
அதிமுகவின் முன்னாள் அமைச்சரான கு.ப.கிருஷ்ணன், அக்கட்சியில் இருந்து விலகி ‘தமிழர் பூமி’ என்ற கட்சியைத் தொடங்கி, 2001 இல் திமுக கூட்டணியில் இணைந்தார். பின்னர் மீண்டும் அதிமுகவில் இணைந்த அவர், கட்சியில் பிளவு ஏற்பட்டபோது ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராகச் செயல்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைய, கடந்த ஜனவரியில் தவெகவில் இணைந்தார். சட்டமன்ற தேர்தலில் தவெக சார்பில் லால்குடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். ஆனால், ஏற்கனவே பேசியபடி அவருக்கு தவெக பதவி வழங்கி உள்ளது.
[youtube-feed feed=1]