டெல்லி: போர்ச்சூழல், எரிபொருள் தட்டுப்பாடு குறித்து பிரதமர் மோடி தலைமையில் நாலறை மணி நேரம் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஆலோசனை கூட்டம். நடைபெற்றது.

.பிரதமர் மோடியின் 5 நாள் அரசுமுறைப் பயணம் முடிவடைந்து, இந்தியா வந்தடைந்த நிலையில், அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.  இந்த ஆலோசனை கூட்டம், “பிரதமர் நரேந்திர மோடி தலைமையில்,   எரிபொருள் தட்டுப்பாடு உள்பட பல்வேறு முக்கிய பிரச்னைகளும், விரைவான சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன. மத்திய அமைச்சர்கள், இணை அமைச்சர்கள் பங்கேற்ற இந்தக் கூட்டம், சுமார் நான்கரை மணிநேரம் நீடித்தது.  இந்தாண்டின் முதல் முழு அமைச்சரவைக் கூட்டம் இதுதான் என்று கூறப்படுகிறது.

மேற்கு ஆசிய மோதலால் உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை மதிப்பிடுவதற்காக, பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் மத்திய அமைச்சரவையுடன் முக்கியக் கூட்டங்களை நடத்தினார்.  மே 21, 2026 நடைபெற்ற கேபினட் கூட்டத்தில், எரிபொருள் விலைகள், மேற்கு ஆசிய மோதல், எரிபொருள் விலைகள், பணவீக்கம் மற்றும் பொருளாதாரம் குறித்த கவலைகள் குறித்தும்,  எரிபொருள், எரிவாயுவின் தடையற்ற விநியோகத்தை உறுதி செய்யுமாறு அமைச்சர்களிடம் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்..

நாட்டின் நிலையை ஆய்வு செய்வதற்காக, பிரதமர் நரேந்திர மோடி தனது இல்லத்தில் தனது உயர்மட்ட அமைச்சரவை அதிகாரிகளுடன் ஒரு கூட்டத்தை நடத்தினார். அப்போது,  உலகளாவிய எரிசக்தி பணவீக்கத்தை சமாளிக்க, பொதுமக்களும் தொழில்துறையினரும் தாமாக முன்வந்து எரிபொருள் மற்றும் அந்நிய செலாவணியை சேமிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

மேலும், விக்‌ஷித் பாரத் 2047 (வளர்ச்சியடைந்த இந்தியா) இலக்கை ஒரு முழக்கமாக மட்டும் எடுத்துக் கொள்ளாமல், ஒரு உறுதிமொழியாகக் கருதி முன்செல்ல வேண்டும் என்று மத்திய அமைச்சர்களை பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.தொடர்ந்து, எரிசக்தி, விவசாயம், உரங்கள், விமானப் போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து மற்றும் தளவாடங்கள் போன்ற துறைகள் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.

மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றம், உலகளாவிய நிச்சயமற்ற தன்மை, எரிபொருள் தட்டுப்பாடு, நிர்வாகத் திறன் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.மேற்கு ஆசிய பதற்றம் மற்றும் அதன் பொருளாதாரத் தாக்கத்தால், மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமலிருக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் பிரதமர் கூறியுள்ளார்.

அடுத்த தலைமுறை சீா்திருத்தங்களை மேற்கொண்டு வளா்ச்சியை அதிகரிப்பதே நமது முதல் பணியாகும். 2047-ஆம் ஆண்டு இந்தியா தனது 100-ஆவது சுதந்திர தினத்தில் அடியெடுத்து வைக்கும்போது இந்தச் சாதனைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும்..மக்களின் வாழ்வுக்கு இடையூறு ஏற்படாத வகையில் எந்தவொரு திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும். இப்போது நாம் எதிா்காலத்தை பற்றியே சிந்திக்க வேண்டும். கடந்த காலங்களில் மூழ்கிவிடக் கூடாது என்றாா்..

அண்மையில் ஐக்கிய அரபு அமீரகம், நெதா்லாந்து, ஸ்வீடன், நாா்வே மற்றும் இத்தாலி ஆகிய 5 நாடுகளுக்கு பிரதமா் மோடி மேற்கொண்ட பயணம் குறித்து வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் கூட்டத்தில் எடுத்துரைத்தாா்..

முன்னதாக,  தடையற்ற சரக்கு மற்றும் எரிசக்தி போக்குவரத்தை உறுதி செய்வதற்காக, அமைச்சரவைச் செயலாளர் உட்பட உயர் மட்ட அதிகாரிகள், ஹார்முஸ் ஜலசந்தியில் உள்ள புவிசார் அரசியல் நெருக்கடிகளை ஆய்வு செய்தனர்.

இதைத் தொடர்ந்து,  உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வுகளால் எரிபொருள் விலையில் சிறிய அளவிலான உயர்வு ஏற்பட்டிருந்தாலும், பெட்ரோல், டீசல் அல்லது எல்பிஜி ஆகியவற்றிற்கு உள்நாட்டில் பற்றாக்குறை எதுவும் இல்லை என்றும், தேசிய எரிசக்தி கையிருப்பு நிலையாக உள்ளது என்றும் அரசாங்கம் கூறி உள்ளது. இந்தியா 53 லட்சம் மெட்ரிக் டன் மூலோபாய கச்சா எண்ணெய் கையிருப்பை உருவாக்கியுள்ளது என்றும், மேலும் 65 லட்சம் மெட்ரிக் டன்களுக்கு மேல் சேர்ப்பதற்கான விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் நிர்வாகம் சுட்டிக்காட்டியது.

கடுமையான நெருக்கடி சூழ்நிலைகளிலிருந்து உள்நாட்டுப் பொருளாதாரத்தைப் பாதுகாக்க, பலதரப்பட்ட உலகளாவிய கூட்டாளிகளிடமிருந்து இந்தியா தீவிரமாக கச்சா எண்ணெயைப் பெற்று வருவதை வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியது.

இந்த நிலையில், மத்திய அமைச்சரவைக் கூட்டம் தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில்  வெளியிட்டுள்ள பதிவில்,  நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எளிதான வாழ்க்கை, வணிகம் செய்வதை எளிதாக்குவது தொடர்பான விவாதங்களையும் கருத்துகளையும் பரிமாறிக் கொண்டோம் என்று கூறியுள்ளார்.

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற நிகழாண்டின் முதல் மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் கேபினட் அமைச்சா்கள், மத்திய இணையமைச்சா்கள் (தனிப்பொறுப்பு) மற்றும் மத்திய இணையமைச்சா்கள் பங்கற்றனா்.. மேலும்,  பல்வேறு துறை ரீதியான அதிகாரிகள் பங்கேற்றறனா். ஒட்டுமொத்தமாக 9 துறைச் செயலா்கள் கலந்துகொண்டு தங்கள் அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டங்களை விளக்கப்படமாக எடுத்துரைத்தனா். நீதி ஆயோக் உறுப்பினா் ராஜீவ் கௌபாவும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றாா்..

தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் மற்றும் புதுச்சேரியில் பேரவைத் தோ்தல் முடிவடைந்த பின் முதன்முதலாக அமைச்சா்கள் குழுக் கூட்டம் கூடியது குறிப்பிடத்தக்கது.”,”dateCreated”:”2026-05-22T04:05:16.616+05:30″,”dateModified”:”2026-05-22T04:05:16.956+05:30″,”name”:”மக்கள் நல்வாழ்வுக்கான திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுங்கள்

[youtube-feed feed=1]