சென்னை: தமிழ்நாட்டில் ஏற்கனவே மருத்துவ கொள்ளை நடைபெற்று வரும் நிலையில், புதிதாக 8,000 தனியார் மருத்துவமனைகளை திறப்பதற்கு முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு தற்காலிக அனுமதி வழங்கி உள்ளது. இது மெடிக்கல் மாஃபியா கும்பலுக்கு துணைபோகும் செயல் என சமுக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

தமிழ்நாட்டில் மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்தும் வகையிலும், பொதுமக்களுக்கான மருத்துவ சேவைகளை எளிதாக்கும் வகையிலும் தமிழ்நாடு அரசு ஒரு மிக முக்கிய அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன்படி, மாநிலத்தில் புதிதாக 8,000 தனியார் மருத்துவமனைகளை திறப்பதற்கு தற்காலிக அனுமதி வழங்க தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
புதிய மருத்துவமனைகள் அமைக்க ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவேற்றம் செய்தாலே தற்காலிக சான்றிதழை உடனே வழங்கவும், முழு ஆய்வுக்குப் பின்னர் நிரந்தர சான்றிதழ்கள் வழங்கவும் மருத்துத்துறை அமைச்சர் அருண்ராஜ் கூறியுள்ளார்.
புதிய மருத்துவமனைகளை தொடங்குவதற்கான நடைமுறைகளை எளிமையாக்கும் பொருட்டு, ஆன்லைன் மூலம் தேவையான ஆவணங்கள் மற்றும் தகவல்களை பதிவேற்றம் செய்தாலே தற்காலிக சான்றிதழ் உடனடியாக வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் தேவையற்ற காலதாமதம் தவிர்க்கப்படும். அதே நேரத்தில், தற்காலிக அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து, மருத்துவத்துறையின் முறையான மற்றும் முழுமையான கள ஆய்வுக்கு பின்னரே அந்தந்த மருத்துவமனைகளுக்கு நிரந்தர சான்றிதழ்கள் வழங்கப்படும் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
அரசின் இந்த தற்காலிக அனுமதி உத்தரவு, தமிழகத்தின் குக்கிராமங்கள் மற்றும் புறநகர் பகுதிகளிலும் தனியார் மருத்துவ வசதிகள் தடையின்றி, மிக வேகமாக கிடைப்பதற்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அரசு,பொதுமக்களுக்கு முதன்மையான சிகிச்சையை வழங்க பட்டி தொட்டி எங்கும் அரசு மருத்துவமனைகளை ஏற்படுத்திய முறையான சிகிச்சை இலவசமாக வழங்க முன்வரவேண்டுமே தவிர, தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கி, மருத்துவ சேவையை வருமானம்ஈட்டும் தொழிலாக மாற்ற நினைப்பது தவிர்க்கப்பட வேண்டும்.

ஏற்கனவே, தமிழ்நாட்டில் உள்ள பெரும்பான தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை என்ற பெயரில பொதுமக்களின் ரத்தத்தை உறிஞ்சி கொழுத்து வருகிறது. கார்ப்பரேட் மருத்துவமனைகள், தனியார் மருந்தகங்கள், மற்றும் அரசியல்வாதிகள் அடங்கிய கூட்டு சேர்ந்து மெடிக்கல் மாஃபியாக வலம் வருகிறது. , மருத்துவத்தை சேவையாக கருதாமல் வருமானம் கிடைக்கும் ஒரு தொழிலாகவே மாற்றி உள்ளது. இதனால், தேவைய மருத்துவ சோதனைகள், கிட்னி உள்பட நோயாளிகளின் உடற்உறுப்புகள் திருட்டுபோன்றவையும் நாளுக்கு நாள்அதிகரித்து வருகிறது.
இதுமட்டுமின்றி, ஏழை நோயாளிகளைச் சுரண்டுதல், மருந்து விலையேற்றம், மற்றும் தேவையற்ற பரிசோதனைகளை மேற்கொள்ள வைத்தல் போன்ற முறைகேடுகளில் ஈடுபடுவதாகப் பல்வேறு தரப்பினரால் தொடர்ந்து குற்றஞ்சாட்டப்படுகிறது. மேலும், தேவையற்ற மருத்துவச் சோதனைகள் (Unnecessary Tests): பெரிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்குத் தேவையற்ற ரத்தப் பரிசோதனைகள் மற்றும் ஸ்கேன் (Scan) போன்றவற்றைச் செய்து, கட்டணத்தை பல மடங்காக உயர்த்துகின்றனர்.
மருந்து நிறுவனங்களின் கமிஷன் (Pharma Commissions): குறிப்பிட்ட சில பிராண்ட் மருந்துகளை (Branded Drugs) பரிந்துரைப்பதற்காக மருத்துவர்களுக்கு மருந்து நிறுவனங்கள் ரொக்கப் பணம், வெளிநாட்டுப் பயணங்கள் போன்றவற்றை அளிப்பதாகப் புகார்கள் உள்ளன. போலி மருந்துகள் மற்றும் தரமற்ற சிகிச்சைகள்: சந்தையில் போலி மருத்துவர்கள் மற்றும் தரமற்ற மருந்துகள் புழங்குவதும், இது போன்ற மாஃபியா கும்பலின் செயல்பாடுகளால்தான் என்று மருத்துவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
உடல் உறுப்பு மாற்று முறைகேடுகள்: உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முன்னோடியாக இருந்தாலும், ஏழைகளிடம் பணம் கொடுத்து உறுப்புகளை மலிவாக வாங்கி, அதிக விலைக்கு விற்பனை செய்யும் மெடிக்கல் மாஃபியாவும் இயங்குவதாகச் செய்திகள் வெளியாகின்றன.
இந்த நிலையில், விஜய் அரசு,ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் போதுமான அளவுக்கு அரசு மருத்துவமனைகளை உருவாக்கி, பொதுமக்களுக்கு இலவசமாக மருந்து மாத்திரை உள்பட மருத்துவ சேவை மற்றும் சிகிச்சை வழங்கி மக்களின் வாழ்வில் ஒளியேற்றுவதை விட்டுவிட்டு, தனியார் மருத்துவமனைகள் அமைக்க அனுமதி வழங்கி இருப்பது விவாதப்பொருளாக மாறி உள்ளது.
[youtube-feed feed=1]