சென்னை: தவெக அமைச்சரவை மேலும் விரிவாக்கம் செய்யப்படுகிறது. அதன்படி, திமுக கூட்டணி கட்சிகளான விசிக, முஸ்லிம் கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு வழங்கியதற்கு பலனாக, அக்கட்சிகளின் எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுகிறது.
இதுதொடர்பான அறிவிப்பை ஆளுநர் மாளிகை வெளியிட்டது. இன்று காலை 9.30 மணிக்கு 2 புதிய அமைச்சர்கள் பதவியேற்கின்றனர். முதல்வர் விஜய்யின் பரிந்துரைக்கு ஆளுநர் அர்லேகர் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பான்மை கிடைக்காத தவெக, தனது ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்டு, விசிக, முஸ்லிம் கட்சிகளின் ஆதரவுடன் பெரும்பான்மையை நிரூபித்தது. இந்த கட்சிகளில் காங்கிரஸ் தவிர மற்ற கட்சிகள் திமுகவின் கண் அசைவிற்கு ஏற்ப செயல்படும் கட்சிகளாகும். ஆட்சிஅதிகார ஆசையில், விஜய், தனது அமைச்சரவையில் திமுக கூட்டணி கட்சிகளுக்கு வாய்ப்பு வழங்க வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகி உள்ளது.
இதன் தொடர்ச்சியாக, விசிக, முஸ்லிம் கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்குஅமைச்சர் பதவி அறிவிக்கப்பட்டுள்ளது. தவெகவின் அழைப்பை ஏற்று அமைச்சரவையில் இடம் பெறுவதாக விசிக மற்றும் ஐயுஎம்எல் ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளன.
தமிழ்நாடு அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தவெகவை சேர்ந்த 21 எம்எல்ஏக்களும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 எம்எல்ஏக்களும் அமைச்சர்களாக பதவியேற்றனர். இதனை தொடர்ந்து தமிழ்நாடு அமைச்சர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்தது.
இதற்கிடையில் தவெகவின் அழைப்பை ஏற்று அமைச்சரவையில் இடம் பெறுவதாக விசிக மற்றும் ஐயுஎம்எல் ஆகிய கட்சிகள் நேற்று அறிவித்தன. இது தொடர்பாக நேற்று செய்தியளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், தவெக அமைச்சரவையில் விசிக இடம் பெறும் என்றும் அமைச்சராக வன்னி அரசு பொறுப்பேர்ப்பார் என்றும் கூறினார்.
அதே போல ஐயூஎம்எல் கட்சியின் தலைவர் காதர் மொகிதீன், தவெக அமைச்சரவையில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் இடம்பெறும் என்றும் பாபநாசம் தொகுதியின் ஐயூஎம்எல் எம்எல்ஏ ஷாஜகான் அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்” என்று அறிவித்தார்.
[youtube-feed feed=1]