திருப்பூர்: திமுகவில் எமாற்றுக் கட்சிகளிலிருந்து வந்தவர்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. திமுக ஆதிக்க சக்தியின் பிடியில் உள்ளது என குற்றம் சாட்டி திமுக மாவட்ட செயலாளர் கட்சியில் இருது விலகி ள்ளது.
50ஆண்டு காலமாக திமுகவுக்காக உழைததவர்களுக்கு ஏதும்இல்லை எனதிமுக தலைமைமீது பகிரங்கமாக குற்றம் சாட்டி, கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் திருப்பூர் மாவட்ட செயலாளர் செல்வராஜ். இது திமுக தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், திருப்பூர் மத்திய மாவட்ட செயலாளருமான கே. செல்வராஜ், திமுக தலைமைமீதான அதிருப்தி காரணமாக, தான் மிகுந்த மனவேதனை அடைந்ததாக கூறி, செய்தியாளர்கள் முன்னிலையில்6, கண் கலங்கியபடி திமுகவிலிருந்து விலகுவதாக நேற்று (21.05.2026) அறிவித்தார்.
நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட திமுகவினர் பெரும் தோல்வியை சந்தித்தனர். விளம்பர மயக்கத்தில் மீண்டும் வெற்றிபெறுவோம் என்று மார்தட்டி வந்த திமுக தலைவர் ஸ்டாலின், கொளத்தூர் தொகுதியில், முன்னாள் திமுக மாவட்ட செயலாளர் பாவுவிடமே தோல்வியை தழுவியது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது.
திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் 73 இடங்களில் வென்றது. திமுக மட்டும் 59 தொகுதிகளில் மட்டுமே வென்று மற்ற இடங்களில் தோல்வியை தழுவியுள்ளது. மேலும், திமுகவின் கோட்டை எனப்படும் சென்னையிலேயே திமுக படுதோல்வி அடைந்ததும், திமுக தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் திருப்பூர் திமுகவின் முகமாகத் திகழ்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான கே. செல்வராஜ், செய்தியாளர்களைச் சந்தித்த போது தனது அரசியல் பயணத்தின் இறுதி முடிவை கண்ணீருடன் அறிவித்தார்.
அவர் கூறியதாவது, கடந்த 1976ஆம் ஆண்டு ஒரு சாதாரண தொழிற்சங்கப் பணியாளராக திமுகவில் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியதாக கூறியவர், கடந்த 50 ஆண்டுகளாக திமுகவின் வளர்ச்சிக்காக அயராது உழைத்ததாக கூறினார். மேலும் இந்த நீண்ட காலப் பயணத்தில் திருப்பூர் நகரக் கழகச் செயலாளர், திருப்பூர் மாநகர மேயர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்டச் செயலாளர் என பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்து, கொங்கு மண்டலத்தில் கட்சியை வலுப்படுத்துவதில் முதன்மையானவராக விளங்கியதாக
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய செல்வராஜ், கடந்த சில ஆண்டுகளாக கட்சிக்குள்ளும், தலைமைக்குள்ளும் ஏற்பட்ட கடுமையான மாற்றங்களே திமுகவின் தற்போதைய நிலைக்கு காரணம் என்றவர், அதன் காரணமாகவே தான் இந்தைகைய முடிவுக்கு வரவும் காரணம் என்று வேதனையுடன் குறிப்பிட்டார்.

குறிப்பாக, கடந்த 2021ஆம் ஆண்டுக்குப் பின்னர் திமுகவில் பல ஆண்டுகளாகக் ரத்தம் சிந்தி, உண்மையாக உழைத்த தங்களைப் போன்ற மூத்த நிர்வாகிகளுக்கு முறையான மதிப்பும், அங்கீகாரமும் வழங்கப்படுவதில்லை என்றவர், அதே சமயம், மிகச் சமீபத்தில் மாற்றுக் கட்சிகளில் இருந்து திமுகவிற்கு வந்தவர்களுக்கு மிக முக்கியப் பொறுப்புகளும், அளவு கடந்த அதிகாரங்களும் வாரி வழங்கப்படுவதாக திமுக தலைமைமீது பகிரங்கமாக குற்றம் சாட்டியதுடன், கட்சியின் இந்த ஒருதலைப்பட்சமான போக்கினாலும், உழைத்தவர்கள் ஓரங்கட்டப்படுவதாலும் தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதக தெரிவித்தவர், இனியும் சுயமரியாதையை இழந்து கட்சியில் நீடிக்க விரும்பவில்லை என்று தெரிவித்தார்.
திருப்பூரில் இஸ்லாமிய மக்களுக்குக் ‘கபர்ஸ்தான்’ (மயானம்) அமைப்பதற்கான நிலம் வழங்குவதைத் தொழிலதிபர் டாலர் பாலசுப்பிரமணியன் தடுத்து நிறுத்தினார். அதிலிருந்தே எங்களுக்குள் பிரச்சினை ஆரம்பமானது.
திமுக தலைவர் திருப்பூர் வரும்போதெல்லாம் அவர் வீட்டில் தங்குவதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, என்னை முற்றிலும் ஓரங்கட்டி விட்டார்கள். கட்சி ஆதிக்க சக்திகளின் பிடியில் சிக்கியுள்ளது என்பதை உணர்த்தவே நான் இந்த முடிவை எடுத்துள்ளேன்.
எதிர்காலத்தில் திமுக தான் ஆட்சிக்கு வரும், மு.க.ஸ்டாலின் தான் மீண்டும் முதலமைச்சர் ஆவார் என்று குறிப்பிட்ட செல்வராஜ், அதற்காகத் தன்னைத் தியாகம் செய்வதாகக் கூறினார்.
மேலும், தனக்குப் பல கட்சிகளிலிருந்து அழைப்புகள் வந்த போதிலும், எந்தவொரு மாற்றுக் கட்சிக்கும் செல்லும் எண்ணம் தனக்கில்லை என்றும், அடிப்படை உறுப்பினராக இல்லாவிட்டாலும் கழகத்திற்கு உண்மையாக உழைப்பவர்களுக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பேன் என்றும் கூறித் தனது விலகல் கடிதத்தை அறிவித்துள்ளார். =
இதன் காரணமாக, திமுகவின் அனைத்து அடிப்படைப் பொறுப்புகளில் இருந்தும், மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்தும் விலகுவதோடு, தீவிர அரசியலில் இருந்தும் முழுமையாக ஒதுங்கப் போவதாக அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
திருப்பூர் மாவட்ட திமுகவில் பெரும் செல்வாக்கு பெற்ற ஒரு மூத்த தலைவர் கண் கலங்கி, தலைமையின் மீது அதிருப்தி தெரிவித்துக் கட்சியிலிருந்து வெளியேறியுள்ள இந்தச் சம்பவம், தற்போது தமிழக அரசியல் வட்டாரத்திலும், திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
[youtube-feed feed=1]