டெல்லி: பிரதமர் மோடி ஐந்து நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை நிறைவுசெய்த நிலையில், இன்று காலை தாயகம் திரும்பினார். இதைத்தொடர்ந்து நாளை தமிழ்நாடு முதல்வர் விஜய் பிரதமரை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பிரதமர் மோடி, கடந்த மே 15 முதல் 20 வரை, ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே மற்றும் இத்தாலி ஆகிய ஐந்து நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். இந்த ஐந்து நாள்கள் பயணத்தில் எரிசக்தி, பாதுகாப்பு மற்றும் கனிமங்கள் தொடர்பான முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட அவர் ஐந்து நாடுகளுக்கான முக்கியத் தலைவர்களையும் சந்தித்து உரையாடினார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில், பெட்ரோலிய இருப்புக்கள், நீண்டகால எல்பிஜி விநியோகம், பாதுகாப்பு மற்றும் கப்பல் போக்குவரத்து ஆகியவற்றை உள்ளடக்கிய தொடர்ச்சியான முக்கிய ஒப்பந்தங்களில் இந்தியா கையெழுத்திட்டது. மேலும், இந்தியாவில் 5 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்வதாக அபுதாபி உறுதியளித்துள்ளது.
நெதர்லாந்து பயணத்தின் போது, பாதுகாப்பு, முக்கிய கனிமங்கள் மற்றும் பிற முக்கியத் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக 17 ஒப்பந்தங்களில் இந்தியா கையெழுத்திட்டது.சுற்றுப்பயணத்தின் அடுத்த கட்டத்தில், இந்தியாவும் ஸ்வீடனும் தங்களது நல்உறவை மேம்படுத்த வழிவகை செய்தன.நார்வே நாட்டுக்குச் சென்றபோது, தூய்மையான ஆற்றல், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் திறன், நீலப் பொருளாதாரம், பசுமைக் கப்பல் போக்குவரத்து, டிஜிட்டல் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் ஆர்க்டிக் ஆராய்ச்சி போன்ற துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டன
.தனது சுற்றுப்பயணத்தின் இறுதிக் கட்டமான இத்தாலியில், பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதுகளும் பதக்கங்களும் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டன..
இந்த நிலையில் பிரதமர் மோடியை முதல்வர் விஜய் நாளை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முதல்வர் விஜய் நடிகராக இருந்தபோது, கடந்த 2014ம் ஆண்டு அப்போதைய குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடியை கோவையில் சந்தித்து பேசினார். இதைத்தொடர்ந்து, கடந்த 2024ம் ஆண்டும் பிரதமரை விஜய் சந்தித்து பேசினார். தற்போது தமிழ்நாட்டின் முதல்வராக பதவி ஏற்றுள்ள விஜய், முதல்வராக பிரதமர் மோடியை நாளை (மே 22) டெல்லியில் சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தற்போது பிரதமர் மோடி அரசு முறை பயணமாக வெளிநாட்டில் இருப்பதால், அவர் 22ம் தேதி இந்தியா திரும்பியதும் இந்த சந்திப்பு நடைபெறும் என
இந்த சந்திப்பின் போது, தமிழக வளர்ச்சி தொடர்பான திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என விஜய் கோரிக்கை வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. மாநிலத்தின் முக்கிய திட்டங்கள், உட்கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், பிரதமர் மோடியை சந்தித்த பிறகு, விஜய் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார். குறிப்பாக சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோருடன் சந்திப்பு நடைபெறலாம் என அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
முதல்வராக பதவியேற்ற பின்னர் விஜய் முதல் முறையாக பிரதமரை சந்திக்க உள்ள இந்த நிகழ்வு, தமிழக அரசியலில் மிக முக்கியமான முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. மத்திய அரசுடன் மாநில அரசின் உறவை வலுப்படுத்தும் வகையில் இந்த சந்திப்பு இருக்கும் என அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன
[youtube-feed feed=1]