சென்னை:  கோவில் பணத்தை அரசு நிறுவனங்களில் டெபாசிட் செய்யும் வகையில் திமுக அரசு கொண்டு வந்த  அறநிலையத்துறையின் நடவடிக்கையை எதிர்த்து  தொடரப்பட்ட வழக்கில் அரசு பதில் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின் தலைமையிலான கடந்த திமுக ஆட்சிக்காலத்தில், கோவில்களில் மூலம் கிடைத்து வரும் வருமானத்தை கோவில்களுக்கே பயன்படுத்த வேண்டும் என்ற விதியை மாற்றி,  பல நூறு கோடி ரூபாய் உபரி நிதியை, அரசுக்குச் சொந்தமான மற்றும் நலிவடைந்து வரும் வங்கிசாரா நிதி நிறுவனங்களில் டெபாசிட் செய்ய முடிவு செய்து, சட்டமன்ற தேர்தல் வருவதை கருத்தில் கொண்டு அவசரம் அவசரமாக 2026ம் ஆண்டு  பிப்ரவரி 17, 2026 அன்று ஒரு அரசாணை மூலம் திமுக அரசால்  விதிகள் திருத்தப்பட்டன.

வேறு எந்தவொரு மதத்தின் ஸ்தலங்கள், சொத்துக்கள் முலம் வரும்  வருமானத்தை அரசு பெறாத நிலையில், இந்து கோவில்களுக்கு சொந்தமான வருவாய் மற்றும் பக்தர்கள் அளிக்கும் காணிக்கையை அரசு கையப்படுத்தி வருவதுடன், அதை எதேச்சதிகாரமாக செலவிட்டு வருவது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இதுகுறித்து தமிழ்நாடு அரசு,  அறநிலையத்துறை பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

கடந்த திமுக அரசு, இந்து விரோத நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வந்தது. இந்து கோவில்களில் கிடைக்கும் வருமானத்தைக்கொண்டு சிறுபாண்மையினர் உள்பட பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தி வந்ததுடன், கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கு முறையான வசதிகள் செய்து தராத நிலையே தொடர்ந்து. இதற்கு தமிழக மக்கள், குறிப்பாக இந்து மக்கள் திமுகவை தோற்கடித்துள்ளனர்.

இந்த நிலையில்,  கடந்த தி.மு.க ஆட்சிக்காலத்தில், கோவில்களின் பல நூறு கோடி ரூபாய் உபரி நிதியை, அரசுக்கு சொந்தமான ‘தமிழ்நாடு பவர் ஃபைனான்ஸ்’ (TNPFC) மற்றும் ‘தமிழ்நாடு டிரான்ஸ்போர்ட் டெவலப்மென்ட் ஃபைனான்ஸ்’ (TNTDFC) ஆகிய வங்கிசாரா நிதி நிறுவனங்களில் டெபாசிட் செய்ய எடுக்கப்பட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது.

இந்த  முடிவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ‘இண்டிக் கலெக்டிவ் டிரஸ்ட்’ அமைப்பைச் சேர்ந்த கோவில் ஆர்வலர் டி.ஆர்.ரமேஷ்  இதுரதொடர்பாக பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த பொதுநல மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற கோடைகால விடுமுறைக்கால அமர்வு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன்-வி.லட்சுமிநாராயணன், இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை (HR&CE) மே 27-ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை அடுத்த வாரமே இறுதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்துள்ளனர்.

வழகின் பின்னணி 

இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.ரவி மற்றும் வழக்கறிஞர் பி.ஜெகன்னாத் ஆகியோர் , கடந்த பிப்ரவரி 17, 2026 அன்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதன் மூலம், 1963-ம் ஆண்டின் சமய நிறுவனங்கள் (பணத்தை பாதுகாத்தல், முதலீடு செய்தல் மற்றும் கடன் வழங்குதல் அல்லது வாங்குதல்) விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இத்திருத்தமானது, நலிவடைந்து வரும் மற்றும் பாதுகாப்பற்ற அரசு சாரா நிதி நிறுவனங்களில் கோவில் நிதியை டெபாசிட் செய்ய வழிவகுக்கிறது. எனவே, இந்த அரசாணையை நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தது.

மனுதாரர் தரப்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட முக்கியத் தகவல்கள்; TNPFC மற்றும் TNTDFC நிறுவனங்கள் பொதுமக்களிடம் இருந்து டெபாசிட் பெற்று, மின்வாரியம் (Tangedco) மற்றும் அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் மூலதனம் மற்றும் செயல்பாட்டுத் தேவைகளுக்காக நிதி வழங்கி வருகின்றன

. ‘தமிழ்நாடு பவர் ஃபைனான்ஸ்’ (TNPFC) நிறுவனத்திற்கு ‘BBB minus’ ரேட்டிங் வழங்கப்பட்டுள்ளது. ஒரு வங்கிசாரா நிதி நிறுவனம் பொதுமக்களிடம் டெபாசிட் பெற வேண்டுமானால், அதற்கு இருக்க வேண்டிய குறைந்தபட்ச ரேட்டிங் இதுவாகும். இந்நிதி நிறுவனம் 100% தமிழக அரசுக்குச் சொந்தமானது என்பதால் மட்டுமே இதன் ரேட்டிங் ‘BBB(-)’ ஐ விடக் குறையாமல் தப்பித்துள்ளது.

மின்வாரியமோ சுமார் ரூ.1.62 லட்சம் கோடிக்கும் மேல் திரண்ட நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இதே போன்ற ஒரு மோசமான சூழலில்தான் போக்குவரத்துக் கழக நிதி நிறுவனமும் (TNTDFC) உள்ளது.

அரசு நிறுவனங்களின் நஷ்டத்தை ஈடுகட்ட, ஆன்மீகக் காரியங்களுக்கும் கோவில் பராமரிப்புக்கும் பயன்படுத்தப்பட வேண்டிய பக்தர்களின் உபரிப் பணத்தை, நலிவடைந்து வரும் அரசு நிறுவனங்களுக்கு நிதியுதவி செய்ய அனுமதிக்கக் கூடாது என்று மனுதாரர் தனது பிரமாணப் பத்திரத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மனுதாரர் தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் மிக முக்கியமான சட்டக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டனர். மேலும், இந்த விவகாரத்தில் இந்து சமய அறநிலையத்துறை ஒரு வாரத்திற்குள் தங்களது பதில் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அடுத்த வாரமே இந்த வழக்கின் இறுதி விசாரணை நடைபெறும் என்றும் உத்தரவிட்டனர்.

 “கோவில் வருமானம் கோவிலுக்கே சொந்தம்” என்பது சட்டப்படியும், நீதிமன்ற தீர்ப்புகளின்படியும் மிக ஆழமாக வலியுறுத்தப்படும் ஒரு கருத்தாகும்.‘  கோவில் உண்டியல் காணிக்கைகள், நிலங்கள் மற்றும் கடைகள் மூலம் வரும் வருமானம் அனைத்தும் அந்தந்தக் கோயிலின் மூலவருக்கே (Deity) சட்டப்பூர்வமாகச் சொந்தமானவை. இந்த வருமானம் கோவில் பராமரிப்பு, திருவிழாக்கள், நித்திய பூஜைகள், அர்ச்சகர்கள் ஊதியம் மற்றும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளுக்கு மட்டுமே முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும்.

கோவில் நிதி என்பது புனிதமான நோக்கத்திற்காகத் தரப்படுவது என்பதால், அதனை வேறு எந்த அரசுத் திட்டங்களுக்கும் அல்லது பொது நிதிகளுக்கும் திசை திருப்பக் கூடாது என உச்சநீதிமன்றம் மற்றும் பல்வேறு உயர் நீதிமன்றங்கள் கண்டிப்பான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளன.  தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை (HR&CE) கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் வருவாய், கோவில் மேம்பாடு மற்றும் இந்து சமயம் சார்ந்த செயல்பாடுகளுக்கு மட்டுமே செலவிடப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சமீபத்தில்  திமுக அரசு அதில் அவசரம் அவசரமாக திருத்தம் செய்துள்ளது.

[youtube-feed feed=1]