சென்னை: தமிழ்நாட்டில், புதிய அரசு பதவி ஏற்றது முதல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில், இன்று மேலும் 15 பேர் இடமாற்றம்- செய்யப்பட்டு உள்ளனர்.
தவெக அரசு புதிதாக தொடங்கி உள்ள சிங்கப்பெண் படை சிறப்பு பிரிவு ஐ.ஜி.யாக வானீஸ்வரி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் 15 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை ஐஜியாக பவானீஸ்வரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் காவல்துறை தலைமை இயக்குநர் (பொறுப்பு) வெங்கடராமன், குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுப் பிரிவு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஐஜி அவினாஷ் குமார், காவல் தலைமையக பொதுப்பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
காவல் தலைமையக பொதுப்பிரிவு ஐஜி பிரவீன்குமார் அபிநபு, சென்னை வடக்கு மண்டல ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். கோயம்புத்தூர் காவல்துறை எஸ்.பி.யாக இருந்த கார்த்திகேயன், தாம்பரம் மாநகர சட்டம்- ஒழுங்கு துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தாம்பரம் சட்டம்- ஒழுங்கு துணை ஆணையர் அல்லாட்டிபள்ளி பவன் குமார் ரெட்டி, கோயம்புத்தூர் எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஐஜி சரவணசுந்தர், சென்னை குற்றப்பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், காத்திருப்போர் பட்டியலில் இருந்த மகேஷ், தற்போது வேலூர் சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை போக்குவரத்து தெற்கு மண்டல இணை ஆணையராக பணியாற்றி வந்த விஜயகுமார், தற்போது பெருநகர சென்னை காவல்துறையின் தெற்கு மண்டல சட்டம்- ஒழுங்கு இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். புதுக்கோட்டை எஸ்.பி. அபிஷேக் குப்தா, தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆவடி தமிழ்நாடு சிறப்பு காவல்படை படைப்பிரிவின் மைய காவல் கண்காணிப்பாளராக இருந்த பிருந்தா, நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை சைபர் கிரைம் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த ஷானாஸ், தற்போது கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த அரவிந்த், தற்போது காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்ட காவல் உதவி கண்காணிப்பாளராக இருந்த சதீஷ்குமார் பதவி உயர்வு பெற்று திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்ட காவல் உதவி கண்காணிப்பாளராக இருந்த ரவிந்தர குமார் குப்தா பதவி உயர்வு பெற்று, புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
[youtube-feed feed=1]