டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 35வது நினைவு நாளையொட்டி, அந்த நினைவிடத்தில் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்டப பலர் மரியாதை செய்தனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 35-வது நினைவு நாளையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடமான ‘வீர் பூமி’-யில் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வத்ரா, அவரது மகள் மிராயா வத்ரா மற்றும் மகன் ராய்ஹான் வத்ரா ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.