சென்னை: முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது. இன்று புதிய அமைச்சர்ளாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இருவர்கள் உள்பட 23 பேர் இன்று அமைச்சர்களாக பதவி ஏற்கின்றனர். இதற்கான அறிவிப்பை கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ளது.
இதன் மூலம், 59 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அரசில் அக்கட்சி மீண்டும் இடம்பிடிக்கிறது. காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களான ராஜேஷ் குமார் மற்றும் விஸ்வநாதன் ஆகிய இருவரும், TVK அரசில் இணைந்து இன்று அமைச்சர்களாகப் பதவியேற்க உள்ளனர்.‘
59 ஆண்டுகளுக்கு பிறகு, அதுவும் ராஜீவ் காந்தியின் நினைவு நாளில், தமிழ்நாடு அமைச்சரவையில் மீண்டும் காங்கிரஸ் அமைச்சர்கள் பதவியேற்பதை காண்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாத உணர்வு என மாணிக்கம் தாகூர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து காங்கிரஸ், விசிக, சிபிஎம், சிபிஐ, ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் அளித்த ஆதரவை தொடர்ந்து அக்கட்சி ஆட்சியமைத்துள்ளது. முதலமைச்சராக விஜயும் அமைச்சர்களாக ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட 9 பேரும் பொறுப்பேற்றனர். மேலும் அமைச்சர்களுக்கு கடந்த 16 ஆம் தேதி துறைகள் ஒதுக்கப்பட்டன.
இந்த நிலையில், தமிழ்நாட்டு அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்து புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்க உள்ளனர். ஆளுநர் மாளிகையில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.
தமிழ்நாடு அமைச்சரவையில் முதலமைச்சர் மற்றும் 33 அமைச்சர்கள் இடம் பெறலாம். தற்போது முதலமைச்சர் மற்றும் 9 அமைச்சர்கள் மட்டுமே உள்ள நிலையில், பல்வேறு துறைகளுக்கு அமைச்சர்கள் இல்லாததால் பணிகள் முடங்கி உள்ளன. அதனால் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட வேண்டிய அவசியம் உள்ளது.
இதற்கிடையில், தவெக சார்பில் தமிழ்நாடு அமைச்சரவையில் பங்கேற்க கோரி காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் அமைச்சர் பதவிக்கு ராஜேஷ் குமார் மற்றும் பி.விஸ்வநாதன் ஆகியோர் முன்மொழியப்பட்டுள்ளனர்.
அதே நேரத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள், ஆட்சியில் பங்கெடுக்க மாட்டோமென்று கூறிவிட்டனர். விசிக மற்றும் ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் தரப்பில் இன்னும் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.
மேலும் தவெகவுக்கு சட்டமன்றத்தில் பெரும்பான்மைக்கு ஆதரவு அளித்த அதிமுகவின் ஒரு பிரிவை சேர்ந்த சிலருக்கு அமைச்சரவையில் இடம் வழங்க தவெக முடிவு செய்திருந்தது ஆனால், திமுக கூட்டணி கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக, அந்த திட்டத்தை தவெக ஒத்தி வைத்துள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாடு அமைச்சரவையை விரிவாக்கம் செய்து புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்க உள்ளனர். கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெறும் இந்த விழாவில் முதலைச்சர் முன்னிலையில், ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் புதிய அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார். இதில் தவெக சார்பில் 18 எம்.எல்.ஏக்களும் காங்கிரஸ் சார்பில் 2 எம்.எல்.ஏக்களும் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ந்த வகையில் 21 பேருக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. இதில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது. சுமார் 59 ஆண்டு காலத்திற்கு பிறகு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஸ்வநாதன் மற்றும் ராஜேஸ் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர்.
இந்த நிலையில் புதிதாக பதவியேற்கவுள்ள 23 அமைச்சர்களின் பெயர்களை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது.
புதிய அமைச்சர்கள் யார்.?
- ஸ்ரீநாத் – தூத்துக்குடி தொகுதி
- கமலி. எஸ் – அவிநாசி தொகுதி
- சி. விஜயலட்சுமி – குமாரபாளையம் தொகுதி
- ஆர்.வி. ரஞ்சித்குமார் – காஞ்சீபுரம் தொகுதி
- வினோத் – கும்பகோணம் தொகுதி
- ராஜீவ் – திருவாடானை தொகுதி
- பி. ராஜ்குமார் – கடலூர் தொகுதி
- வி. காந்திராஜ் – அரக்கோணம் தொகுதி
- மதன் ராஜா. பி – ஓட்டப்பிடாரம் தொகுதி
- ஜெகதேஸ்வரி. கே – ராஜபாளையம் தொகுதி
- ராஜேஷ் குமார். எஸ் – கிள்ளியூர் தொகுதி
- எம். விஜய் பாலாஜி – ஈரோடு கிழக்கு தொகுதி
- லோகேஷ் தமிழ்செல்வன். டி – ராசிபுரம் தொகுதி
- விஜய் தமிழன் பார்த்திபன். ஏ – சேலம் தெற்கு தொகுதி
- ரமேஷ் – ஸ்ரீரங்கம் தொகுதி
- பி. விஸ்வநாதன் – மேலூர் தொகுதி
- குமார். ஆர் – வேளச்சேரி தொகுதி
- தென்னரசு. கே – ஸ்ரீபெரும்புதூர் தொகுதி
- வி. சம்பத் குமார் – கோயம்புத்தூர் வடக்கு தொகுதி
- முகமது ஃபர்வாஸ். ஜே – அறந்தாங்கி தொகுதி
- டி. சரத்குமார் – தாம்பரம் தொகுதி
- என். மேரி வில்சன் – டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி
- விக்னேஷ். கே – கிணத்துக்கடவு தொகுதி