சென்னை:  தவெக அமைச்சரவை நாளை விரிவாக்கம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள்  பரவி வரும் நிலையில்,  அதிமுகவின் எடப்பாடிக்கு எதிரான எஸ்.பி. வேலுமணி அணியினருக்கு அமைச்சர் பதவி கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

தவெகவுக்கு ஏற்கனவே ஆதரவு அளித்துள்ள திமுக கூட்டணி கட்சிகளான கம்யூனிஸ்டு, விசிக, கம்யூனிஸ்டு கட்சிகள் அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடம் வழங்கக்கூடாது என்றும், மீறி வழங்கினால்  ஆதரவை வாபஸ் பெறுவோம் என மிரட்டி வருவதால், வேலுமணி அணியினருக்கு அமைச்சர் பதவி வழங்கும் முடிவை தவெக கைவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

2026 ஏப்ரல் 23ந்தேதி நடைபெற்று  முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலின் முடிவுகள்  மே 4-ந் தேதிவெளியாகின.  இந்த தேர்தலில் தனித்து ஆட்சி அமைக்கக் கூடிய அளவுக்கு எந்தக் கட்சியும் தனிப் பெரும்பான்மை கடைக்கவில்லை.  மற்ற கட்சிகளைவிட அதிக இடங்களை த.வெ.க. வென்றது.  106 இடங்களை பெற்ற தவெகவினால் அரசை அமைக்க இழுபறி ஏற்பட்டது.

பின்னர் திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவு   கடந்த 10-ந் தேதி த.வெ.க.வின் தலைவர் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்றார். அவருடன் ஆனந்த், ஆதவ் அர் ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார், ராஜ்மோகன், பிரபு, கீர்த்தனா ஆகிய 9 அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர். பின்னர் சட்டமன்றத்தில் பெரும்பான்மை  வாக்கெடுப்பின்போது, அதிமுகவின் ஒரு பிரிவினர் தவெகவுக்கு ஆதரவு அளித்தனர். இதனால்  சட்டசபையில் த.வெ.க.வின் பலம் 144 ஆக உள்ளது.

இந்த நிலையில், தவெக அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய முதல்வர் விஜய்முடிவு செய்துள்ளார். இதையடுத்து, த.வெ.க.விற்கு ஆதரவு வழங்கிய  கம்யூனிஸ்டு கட்சிகள், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், ஐ.யூ.எம்.எல். கட்சிகளுக்கு அமைச்சர் பதவி வழங்க முன்வந்துள்ளது.  அதுபோல, சட்டப்பேரவையில் பெரும்பான்மைக்கு ஆதரவு வழங்கிய  அதிமுகவின்  25 எம்.எல்.ஏ.க்களில் சிலருக்கும் அமைச்சர் பதவி வழங்க முன்வந்துள்ளது.

அதன்படி,   காங்கிரசில் உள்ள 5 எம்.எல்.ஏ.க்களில் ராஜேஷ்குமார், விஸ்வநாதன் ஆகிய 2 பேர் அமைச்சரவையில் இடம் பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இவர்களில் ஒருவருக்கு மீன்வளத் துறை ஒதுக்கப்படுகிறது. அதோடு, அ.தி.மு.க.வில் இருந்து பிளவுபட்டு, த.வெ.க.வை ஆதரிக்கும் 25 எம்.எல்.ஏ.க்களில்  முக்கிய மானவர்களான,   எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் உள்பட 6 பேருக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் பரவனி.

ஆனால், திமுக கூட்டணி கட்சிகளான,  விசிக, கம்யூ கட்சிகள்,  அமைச்சரவையில் அ.தி.மு.க அணி இடம்பெறக்கூடாது என முட்டுக்கட்டு போட்டு வருகின்றன. இதை தவெக தலைவரிடம் அக்கட்சி தலைவர்கள் உறுதிபட தெரிவித்துள்தளாக செய்தியாளர்களிடமும் தெரிவித்துள்ளனர். இதனால்  முதல்வர் விஜய் அதிருப்தி  அதிமுகவினருக்கு அமைச்சர் பதவி வழங்கும் முடிவை ஒத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது

இதனால்,  விஜய் அமைச்சரவையில் இடம்பெற துடித்துக் கொண்டிருந்த வேலுமணி, சண்முகம் தரப்புக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில்,  இன்று இரவு 10.50 மணிக்கு தமிழ்நாடு ஆளுநர் சென்னை வருகை தருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  கேரளாவில் இருந்து இன்றிரவு 10.30 மணிக்கு ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் சென்னை வரவுள்ளார். த.வெ.க. அமைச்சரவை நாளை விரிவாக்கம் எனக் கூறுப்படும் நிலையில் ஆளுநர் சென்னை திரும்புகிறார்.

இதையடுத்து அமைச்சரவை விரிவாக்கம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை (21-ந் தேதி) புதிய அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தை பொறுத்த அளவில் முதலமைச்சர் மற்றும் 33 அமைச்சர்கள் இடம் பெறலாம். எனவே மீதமுள்ளவர்கள், த.வெ.க.வில் இருந்து தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

[youtube-feed feed=1]