சென்னை: தமிழ்நாடு முதல்வராக விஜய் பதவி ஏற்றதும், அறிவித்த 200 யூனிட் இலவச மின்சாரம் குறித்து அதிகாரிகளுக்கு மின்வாரியம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. மேலும் மே 10ல் இருந்து 200 யூனிட் இலவச மின்சாரம் கணக்கிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

தமிழ்நாட்டில் மின் நுகர்வோர்களுக்கு இரு மாதங்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக அதிகாரிகளுக்கு மின்சார வாரியம் சுற்றறிக்கை விடுத்துள்ளது. மென்பொருளில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில் மென்பொருளில் செயல்படுத்தப்பட்ட புதிய கூடுதல் மானிய விதிமுறை குறித்து அதிகாரிகள், பணியாளர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்..அனைத்து மாவட்ட பொரியாளர்களுக்கு மின்வாரியம் சுற்றறிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பான வெளியிடப்பட்டுள்ள அரசாணையின்படி, இரு மாதங்களுக்கான மின் பயன்பாடு 500 யூனிட்டுக்குள் இருந்தால் 200 யூனிட் வரை இலவசமாக வழங்கப்படும். இதன் மூலமாக 500 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் 2.23 கோடி குடும்பத்துக்கு ரூ. 235 மிச்சமாகும்.500 யூனிட்டுகளுக்கு அதிகமாகப் பயன்படுத்தும் மின்நுகா்வோருக்கு தற்போது நடைமுறையில் உள்ள 100 யூனிட் மின்சாரம் இலவச சலுகை தொடா்ந்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அனைத்து மாவட்ட மின் பொறியாளர்களுக்கும் மின்வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.மென்பொருளில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில், கட்டண மென்பொருளில் தகுதி சரிபார்ப்பு, மானிய கணக்கீட்டு பட்டியல் ஆகியவற்றின் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும் மின் வாரியத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கும் இதுபற்றி எடுத்துரைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் மே 10ல் இருந்து 200 யூனிட் இலவச மின்சாரம் கணக்கிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
[youtube-feed feed=1]