சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களை அதிகாரிகள் நிற்க வைக்கக் கூடாது எனப் பதிவுத்துறை  உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாட்டில் வருமானம் கொழிக்கும் துறைகளில் ஒன்று பதிவுத்துறை. இங்கு தினமும் ஏராளமானோர் சொத்து பதிவு மட்டுமின்றி, ஆவணப் பதிவுகள், திருமணப் பதிவு, வில்லங்கச் சான்றிதழ் நகல்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான சேவைகள் பத்திரப் பதிவுத்துறை மூலமாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.. இதுக்காக பொதுமக்கள்    அதிகாரிகளை சந்தித்து தங்களது கோரிக்கை மனுக்களை கொடுத்து வருகின்றனர். இவ்வாறு வரும் பொதுமக்கள் அரசு அதிகாரிகளால் கடுமையாக அலைக்கழிக்கப்படுவதுடன், கையூட்டும் பெறுவது வாடிக்கையாக உள்ளது.

இந்த நிலையில்,  சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களை அதிகாரிகள் நிற்க வைக்கக் கூடாது எனப் பதிவுத்துறை  உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், பொதுமக்கள் அமரும் வகையில் ஒவ்வொரு அதிகாரியின் மேஜைக்கு முன்னாலும்  குறைந்தபட்சம் 2 நாற்காலிகள் கண்டிப்பாகப் போடப்பட்டிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.. இந்த புதிய விதிமுறையை மீறி பொதுமக்களை நிற்க வைக்கும் அதிகாரிகள் மீது சிசிடிவி கண்காணிப்பு மூலம் கடுமையான துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.

தமிழகம் முழுமையிலும் உள்ள 587 சார் பதிவாளர் அலுவலகங்களுக்குத் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.. இந்த நிலையில், பொதுமக்கள் சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு வரும்போது அவர்களை அதிகாரிகள் நடத்தும் விதம் குறித்து பதிவுத்துறைத் தலைவர் அனைத்து மாவட்டப் பதிவாளர்களுக்கும் அதிரடி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்..

அதில், பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளைச் சார் பதிவாளரிடமோ அல்லது அங்கு பணிபுரியும் உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்களிடமோ சமர்ப்பிக்க வரும்போது, அவர்களின் மேஜைக்கு முன்பாக கண்டிப்பாக நாற்காலிகள் போடப்பட்டிருக்க வேண்டும். சார் பதிவாளர் அலுவலகம் ஒவ்வொரு அலுவலரின் மேஜைக்கு முன்னாலும் பொதுமக்களுக்காகக் குறைந்தபட்சம் 2 நாற்காலிகள் கண்டிப்பாகப் போடப்பட்டிருக்க வேண்டும்.. பொதுமக்களை நாற்காலியில் உட்கார வைத்துதான் சார்பதிவாளர்கள் மற்றும் ஊழியர்கள் பேச வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது..

[youtube-feed feed=1]