சென்னை: தமிழ்நாட்டின் முதல்வராக விஜய் பதவி ஏற்றதும், ஐஏஎஸ், ஐபிஎஸ், அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக கரூர் மாவட்ட கலெக்டர் உள்பட 10 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சாய்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி,
- வேளாண்துறை இயக்குனராக பொறுப்பு வகித்த முருகேஷ் ஐஏஎஸ் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- மீன்வளத்துறை இயக்குனர் மற்றும் தமிழ்நாடு மீன்வளத்துறை வளர்ச்சி கழகத்தின் மேலாண் இயக்குனராக பொறுப்பு வகித்த முனைவர் கேவி முரளிதரன் ஐஏஎஸ் பணியிடம் மாற்றப்பட்டு வேளாண்துறை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- சென்னை தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை இயக்குனர் முத்துக்குமரன் ஐஏஎஸ் கரூர் மாவட்டத்தின் ஆட்சியராக இருந்த ரவிக்குமாருக்கு பதிலாக புதியதாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- திருவள்ளூர் துணை ஆட்சியர் அப்துல் ரசிக் ஐஏஎஸ் (பயிற்சி நிறைவு பெற்று) திருவள்ளூர், பொன்னேரி துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- செங்கல்பட்டு துணை ஆட்சியர் நல்லசிவன் ஐஏஎஸ்( பயிற்சி நிறைவு பெற்று) காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- கூடுதல் முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் ஐஏஎஸ் மாற்றப்பட்டு அவர் தகவல் தொழில்நுட்ப இணைய சேவை துறையின் கூடுதல் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- தமிழ்நாடு கடல்வழி ஆணையத்தின் முதன்மைச் செயலாளர் வெங்கடேஷ் ஐஏஎஸ் பணியிடம் மாற்றப்பட்டு தமிழ்நாடு கைத்தறி நெசவு ஜவுளித்துறையின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- உயர்கல்வித்துறையின் செயலாளர் பி.சங்கர் ஐஏஎஸ் பணியிடம் மாற்றப்பட்டு, வேளாண்துறை தயாரிப்பு ஆணையராகவும், வேளாண் – விவசாயிகள் நலவாரிய செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
- தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்க மையத்தின் ஆணையராக லதா ஐஏஎஸ் பணியிடம் மாற்றப்பட்டு கூட்டுறவுத்துறை பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- வருவாய் பேரிடர் துறையின் ஆணையராக காயத்ரி கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தடுத்த நாட்களில் பல மாவட்டங்களுக்கு ஆட்சியர்கள் மாற்றப்படுவார்கள் என்றும், பல துறைகளுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
[youtube-feed feed=1]