டெல்லி:  எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை  எண்ணெய் நிறுவனங்கள்  இன்று (வெள்ளிக்கிழமை) உயர்த்தி உள்ளது.

அதன்படி,  4 ஆண்டுகளுக்கு பிறகு, இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், , முக்கிய பெருநகரங்கள் முழுவதும் எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ளன.

மேற்கு ஆசிய மோதல் தொடங்கியதிலிருந்து உலகளாவிய எரிசக்தி விலைகளில் ஏற்பட்ட கடுமையான உயர்வை முழுமையாக ஈடு செய்வதற்குத் தேவைப்பட்ட உயர்வில்,  இன்று பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

சமீபத்தில் சிஐஐ வருடாந்திர வர்த்தக மாநாட்டில்  பேசிய எண்ணெய் துறை செயலாளர் நீரஜ் மிட்டல் , ஈரான் மோதல் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி நெருக்கடி தொடர்பான உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்ட தடைகள் இருந்தபோதிலும், நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை இல்லை என்றும், பெட்ரோல், டீசல் அல்லது எல்பிஜிக்கு பங்கீட்டு முறையை அறிமுகப்படுத்தும் திட்டம் இல்லை என்று கூறினார்.  வளைகுடா போரினால்,  பொதுமக்கள் பதட்டப்படத் தேவையில்லை. போதுமான அளவு எரிபொருள் கையிருப்பு உள்ளது. பங்கீட்டு முறை எதுவும் நடைமுறையில் இல்லை. அது நடக்கப்போவதில்லை,” என்று  உறுதி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இன்று  பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.  டெல்லி-என்சிஆர் பகுதியில் சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்ந்து ரூ.79.09 ஆக உள்ளது. முன்னதாக, மகாநகர் கேஸ் லிமிடெட் நிறுவனம் மும்பை பகுதியில் சிஎன்ஜி விலையை ரூ.2 உயர்த்தியிருந்தது.

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின்படி, தேசிய தலைநகரில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.94.77-லிருந்து ரூ.97.77 ஆகவும், டீசல் விலை ரூ.87.67-லிருந்து ரூ.90.67 ஆகவும் உயர்ந்துள்ளது. ‘

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.10 உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி புதிய விலையாக பெட்ரோல்வ ரூ.103.90க்கும், டீசல் விலை ரூ.95,47க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

உலகளாவிய எரிசக்தி சந்தைகளில் தொடரும் நிலையற்ற தன்மைக்கு மத்தியிலும், இந்தியா தற்போது சுமார் 60 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் இருப்பையும், கிட்டத்தட்ட 45 நாட்களுக்குத் தேவையான எல்பிஜி இருப்பையும் பராமரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பெட்ரோல் மற்றும் டீசலின் விலைகள் இன்று உயர்த்தப்பட்டுள்ளதால், அனைத்து பரிவர்த்தனைகளுக்கான கட்டணங்களும் உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. பால், காய்கறி, போக்குவரத்துக் கட்டணங்கள் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும்,  அன்றாடத் தேவைகளின் விலைகளும் கணிசமாக உயர்ந்துவிடும்.

ஏற்கனவே ஓலா, உபேர், ரேபிடோ போன்றவை மறைமுகமாக விலையை உயர்த்தி உள்ள நிலையில், இனிமேல் அதிரடியாக  கட்டணம் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்

[youtube-feed feed=1]