கொல்கத்தா: மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் தோல்வி அடைந்த நிலையில், புதிய ஆட்சிக்கு வழிவிடும் வகையில், மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் முதல்வர் பதவி விலகுவது மரபு.

ஆனால், திரிணாமுல் காங்கிரஸ் தோல்வி அடைந்துள்ள நிலையில், மம்தா பானர்ஜி தனது முதல்வர் பதவியில் இருந்து விலகப் போவதில்லை பிதற்றி வந்தது. நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியது. மம்தாவின் நடவடிக்கை கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ள நிலையில், மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை மாநில ஆளுநர் ஆர்.என்.ரவி அதிரடியாக டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டுள்ளார். இது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
294 தொகுதிகள் கொண்ட மேற்குவங்க மாநிலத்தில் இரு கட்டங்கள் தேர்தல் நடைபெற்றது. இதில், பாஜக தலைமையிலான என்டிஏ கூடடணி 207 இடங்களில் வென்றது. திரிணாமுல் காங்கிரஸ் வெறும் 80 இடங்களில் மட்டுமே வென்றது. குறிப்பாக மாநில முதல்வரும், அக்கட்சியின் தலைவர் மம்தா பவானிபூரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
இந்த தோல்வி திரிணாமுல் காங்கிரஸுக்கு மிக பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையே தேர்தலில் மாபெரும் முறைகேடு நடந்துள்ளதாகவும், தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தோல்வி அடையவில்லை என்றும் இதனால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப் போவதில்லை என்றும் கூறி பரபரப்பைக் கிளப்பினார். இதனால் மேற்கு வங்கத்தில் அடுத்து என்ன நடக்கும்.. புதிய அரசு எப்படிப் பதவியேற்கும் எனப் பல கேள்விகள் எழுந்தன.
இந்திய அரசியல் சாசனத்தின் விதி 172-ன் படி, ஒரு மாநிலச் சட்டமன்றத்தின் பதவிக்காலம் அதன் முதல் கூட்டத்திலிருந்து சரியாக ஐந்து ஆண்டுகள் மட்டுமே. இந்தக் காலம் முடிவடைந்ததும், அவசரநிலை அறிவிப்பில் இருந்தால் தவிர, அந்தச் சட்டமன்றம் தானாகவே கலைந்துவிடும். அதன்படி, 2021 தேர்தலின் அடிப்படையில் மே 7ம் தேதியன்று அமைந்த மம்தா அரசு, இன்று மே 6ம் தேதியுடன் அரசியல் சாசனப்படி அதிகாரத்தை இழந்துவிடும்.
இந்த நிலையில், மாநில ஆளுநர் ஆர்.என்.ரவி, மம்தா அரசை டிஸ்மிஸ் செய்து இன்று அறிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]