திண்டுக்கல்: தேர்தல் பிரசாரம் காரணமாக, வாக்குப்பதிவு முடிவடைந்ததும், முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தோடு கொடைக்கானல் சென்று 4 நாட்கள் ஓய்வெடுத்த நிலையில், இன்று அங்கிருந்து சென்னை புறப்பட்டார்.

மதுரைவரை காரில் வருகை தரும் முதல்வர் ஸ்டாலின், அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை திரும்புகிறார். குடும்பத்துடன் கொடைக்கானலில் 4 நாட்கள் ஓய்வு எடுத்த முதல்வர் ஸ்டாலின் புதன்கிழமை (ஏப.29) காலை சென்னைக்கு புறப்பட்டார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23ந்தேதி நடந்து முடிந்த பிறகு முதல்வர் ஸ்டாலின் கொடைக்கானலில் குடும்பத்துடன் 5 நாட்கள் தங்கி ஓய்வெடுக்க முடிவெடுத்தார். இதற்காக, அவர் கடந்த ஏப்ரல் 25-ம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு தனி விமானம் மூலம் அங்கிருந்து மதுரைக்கு வந்தார். இதன் பின்னர், கார் மூலம் கொடைக்கானலுக்கு வந்த அவர் பாம்பார்புரம் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கினார்.
முதல்வர் வருகையையொட்டி, கொடைக்கானலில் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தினமும் காலை முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது சிலபொதுமக்கள் மற்றும்சுற்றுலா பயணிகளுடன் கலந்துரையாடினார். நட்சத்திர ஏரியில் குடும்பத்துடன் படகு சவாரி சென்று மகிழ்ந்தனர்.
இதன் காரணமாக கொடைக்கானலில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், படகுகுழாம் உள்பட சில பகுதிகளை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
இதற்கிடையில் முதல்வர ஸ்டாலின், நடைப்பயிற்சி நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் தனியார் அருங்காட்சியகம் உள்பட பல இடங்களுக்கு சென்று பார்வையிட்டார். இதன் பின்னர், கட்சி நிர்வாகிகளை சந்தித்தும் ஆலோசனை நடத்தினார்.
இதற்கிடையில், முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினர், கொடைக்கானல் குறிஞ்சியாண்டவர் கோயில், மாரியம்மன் கோயில், பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தனர்.
இந்நிலையில் ஓய்வை முடித்துக்கொணடு முதல்வர் இன்று (புதன்கிழமை) சென்னைக்கு திரும்புவார் என்று கூறப்பட்டிருந்தது. அதன்படி, 4 நாட்கள் ஓய்வுக்குப் பிறகு இன்று (ஏப்ரல் 29) காலை 8.50 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் கொடைக்கானலில் இருந்து புறப்பட்டு காரில் மதுரை விமான நிலையம் வந்தார். அங்கிருந்து பகல் 12 மணிக்கு தனி விமானத்தில் சென்னைக்கு புறப்பட்டு வந்தார்.
[youtube-feed feed=1]