சென்னை: சித்ரரா பவுர்ணமி- மே தினம் – மற்றும் வார விடுமுறையையொட்டி, தமிழ்நாடு விரைவு போக்குவரத்து கழகம், வழக்கமாக இயக்கும் பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

மேலும், சித்ரா பவுர்ணமியையொட்டி, திருவண்ணாமலைக்கும் சிறப்பு பேந்துகள் இயக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

சென்னையில் இருந்து 30-ந்தேதி சிறப்பு பஸ்கள் இயக்கம் கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளை விட கூடுதலாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சித்ரா பவுர்ணமி சிறப்பு நாளை முன்னிட்டு திருவண்ணாமலை கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் செல்வது வழக்கம். நாளை மறுநாள் வியாழக்கிழமை இரவு 9.50 மணிக்கு சித்ரா பவுர்ணமி தொடங்கி வெள்ளிக்கிழமை இரவு 11.07 மணி வரை நடைபெறுகிறது. அதனால், பக்தர்கள் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

வியாழக்கிழமை அதிகாலையில் இருந்து சென்னை, விழுப்புரம், திண்டிவனம், காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

மேலும் மே 1-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மே தின விடுமுறையாகும்.  மேலும் வார இறுதி நாள்கள் விடுமுறை என  3 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது.  . இதனால் வெளியூர் பயணம் அதிகரிக்கும் என்பதால் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு 30-ந்தேதி மாலையில் இருந்து  கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளை விட கூடுதலாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.   அரசு விரைவு பஸ்கள் மற்றும் இதர போக்குவரத்து கழக பஸ்களுக்கு முன்பதிவு செய்து நெரிசல் இல்லாமல் பயணம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

[youtube-feed feed=1]