டெல்லி:  2025-26-ஆம் நிதியாண்டில் 55,200-க்கும் மேற்பட்ட புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பாஜக அரசு,  கடந்த 2016 ஜனவரில் ‘ஸ்டாா்ட்அப் இந்தியா’ திட்டம் தொடங்கப்பட்ட பிறகு, இந்த ஆண்டில்தான் மிக அதிக எண்ணிக்கையில் புத்தாக்க நிறுவனங்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய வா்த்தகத் துறை அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

அதாவது நாடு முழுவதும்,  ‘ஸ்டார்ட்அப் இந்தியா’ (Startup India) முன்னெடுப்பு தொடங்கப்பட்டதிலிருந்து, ஒரே ஆண்டில் அங்கீகரிக்கப்பட்ட அதிகபட்ச எண்ணிக்கையாக, 2025-26 நிதியாண்டில் மத்திய அரசு 55,200-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்களை அங்கீகரித்துள்ளது.
மொத்த அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 2.23 லட்சத்தைத் தாண்டியுள்ளதுடன், இதன் மூலம் 23.36 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன;

பொது கொள்முதல்:

2025-26 நிதியாண்டில், 38,600-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ‘அரசு மின்-சந்தை’ (GeM) தளத்தில் இணைக்கப்பட்டுள்ளன; இத்தளத்தின் வாயிலாகப் பெறப்பட்ட ஆர்டர்களின் மொத்த மதிப்பு ₹19,190 கோடியைத் தாண்டியுள்ளது.

மேலும் நிதி உதவி, கடன் ஆதரவு மற்றும் பொது கொள்முதல் ஆகிய துறைகளிலும் வலுவான வளர்ச்சி காணப்படுகிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும், மடத்திய அரசின் இந்த முக்கியத் திட்டத்துக்கு தொடா்ந்து சிறப்பான ஆதரவு அளிக்கப்பட்டு வருகிறது. முக்கியமாக புத்தாக்க நிறுவனங்கள் பல்வேறு வழிகளில் நிதி ஆதாரத்தை அதிகரிக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலும் இளைஞா்களால் புதிதான தொழில் சிந்தனையுடன் தொடங்கப்படும் புத்தாக்க நிறுவனங்கள் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் செயல்படக் கூடியதாகும். புத்தாக்க சிந்தனைகளை ஊக்குவிப்பது, தனியாா் முதலீட்டை அதிகரிப்பது ஆகியவை இதன் நோக்கமாகும்..தகவல் தொழில்நுட்பத் துறையில் 22 சதவீதம், வேளாண்மைத் துறையில் 18 சதவீதம், மருத்துவத் துறையில் 15 சதவீத புத்தாக்க நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

[youtube-feed feed=1]