டெல்லி: மாநிலங்களவை துணைத் தலைவராக மூன்றாவது முறையாக  தேர்ந்தெடுக்கப்பட்டார் ஹரிவன்ஷ்.  இவர் பாஜகவின் கூட்டணி கட்சியான  ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்தவர்.

மாநிலங்களவை துணைத்தலைவராக இருந்து வந்த ஹரிவன்சியின்  பதவிக் காலம், கடந்த ஏப். 9-ஆம் தேதியுடன் நிறைவடைந்த  நிலையில், புதிய துணைத்தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டது.   அதன்படி இன்று தேர்தல் நடைபெறும் (17ந்தேதி வெள்ளிக்கிழமை) என அறிவிக்கப்பட்டது. ஆனால்,  ஹரிவன்சியை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில், அவர் போட்டியின்றி தேர்வானார்.

ஏற்கெனவே தொடா்ந்து 2 முறை ஹரிவன்ஷ் வகித்த நிலையில், அவா்  3வது முறையாக துணைத்தவராக மீண்டும் தோ்வு செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக, மாநிலங்களவை துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கும் தீர்மானத்தை மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா முன்மொழிந்தார். எதிர்க்கட்சிகள் தரப்பில் போட்டி வேட்பாளர் களமிறக்கப்படாததை அடுத்து, ஹரிவன்ஷ் நாராயண் தொடர்ந்து மூன்றாவது முறையாக மாநிலங்களவை துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக மாநிலங்களவை தலைவரும் குடியரசு துணைத் தலைவருமான சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவித்தார்.

இதையடுத்து நாடாளுமன்ற மரபுபடி, அவை முன்னவர் ஜெ.பி. நட்டா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் ஹரிவன்ஷை அழைத்துச் சென்று இருக்கையில் துணைத் தலைவருக்கான இருக்கையில் அமரவைத்தனர். அப்போது ஹரிவன்ஷுக்கு வாழ்த்து தெரிவித்த மோடி, மூன்றாவது முறையாக மாநிலங்களவை துணைத் தலைவராக நீங்கள் தேர்வாகியிருப்பது, இந்த அவை உங்கள் மீது வைத்திருக்கும் ஆழ்ந்த நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது என்றார்.

[youtube-feed feed=1]