டெல்லி: ஐ.பி.எல் 2026 தொடருக்கான இரண்டாம் கட்ட அட்டவணை வெளியாகி இருக்கிறது. அதன்படி, சி.எஸ்.கே., குஜராத் டைட்டன்ஸ் போட்டிகளுக்கான அட்டவணையில் திடீர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதுடன், ஏப்ரல் 26-ந்தேதி சென்னை சேப்பாக்கத்தில் சி.எஸ்.கே.- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ), இந்தியன் பிரீமியர் லீக் 2026-இன் இரண்டாம் கட்டத்தில் மீதமுள்ள 50 போட்டிகளுக்கான அட்டவணையை அறிவித்துள்ளது.

ஐ.பி.எல். 2026 கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தேர்தலுக்கு பிறகு சென்னையி, ஏப்ரல் 26-ந்தேதி (ஞாயிறு) இரண்டு போட்டிகளில் நடைபெற இருக்கின்றன. ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த போட்டிகள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன. அகமதாபாத்தில் வருகிற 26-ந்தேதி மாநகராட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் போட்டி அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று ஐபிஎல் தெரிவித்துள்ளது.
அதன்படி, ஏப்ரல் 26-ந்தேதி அகமதாபாத்தில் நடைபெற இருக்கும் போட்டி, சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் எனவும், மே 21-ந்தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற இருக்கும் போட்டி அகமதாபாத்தில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஐ.பி.எல் 2026 தொடருக்கான இரண்டாம் கட்ட அட்டவணை வெளியாகி இருக்கிறது. அதன்படி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ), இந்தியன் பிரீமியர் லீக் 2026-இன் இரண்டாம் கட்டத்தில் மீதமுள்ள 50 போட்டிகளுக்கான அட்டவணையை அறிவித்துள்ளது.
இரண்டாம் கட்டத்தில் எட்டு இருமுறை மோதல் ஆட்டங்கள் இடம்பெறும். இதில், பிற்பகல் போட்டிகள் இந்திய நேரப்படி மாலை 03:30 மணிக்கும், மாலைப் போட்டிகள் இந்திய நேரப்படி இரவு 07:30 மணிக்கும் தொடங்கும்.
பஞ்சாப் கிங்ஸ் அணி, நியூ சண்டிகர் மற்றும் தர்மசாலாவில் தங்களது சொந்தப் போட்டிகளை விளையாடும். இதில், இந்த கட்டத்தில் தர்மசாலாவில் மூன்று போட்டிகளும் அடங்கும். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஜெய்ப்பூரில் நான்கு சொந்தப் போட்டிகளை நடத்தும். அதே நேரத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பெங்களூருவில் மூன்று சொந்தப் போட்டிகளையும், ராய்ப்பூரில் இரண்டு போட்டிகளையும் விளையாடும்,” என்று பி.சி.சி.ஐ தெரிவித்து இருக்கிறது.
2வது கட்ட போட்டி அட்டவணை:
மார்ச் 28 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் | மாலை 7:30 எம். சின்னசாமி மைதானம், பெங்களூரு
மார்ச் 29 மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | மாலை 7:30 வான்கடே மைதானம், மும்பை
மார்ச் 30 ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் | மாலை 7:30 ஏ.சி.ஏ மைதானம், கவுகாத்தி
மார்ச் 31 பஞ்சாப் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் | மாலை 7:30 புதிய பி.சி.ஏ மைதானம், முல்லன்பூர்
ஏப்ரல் 1 லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs டெல்லி கேப்பிடல்ஸ் மாலை 7:30 எகானா மைதானம், லக்னோ
ஏப்ரல் 2 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மாலை 7:30 ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
ஏப்ரல் 3 சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் மாலை 7:30 எம். சிதம்பரம் மைதானம், சென்னை
ஏப்ரல் 4 டெல்லி கேப்பிடல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் பிற்பகல் 3:30 அருண் ஜெட்லி மைதானம், டெல்லி
ஏப்ரல் 4 குஜராத் டைட்டன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் மாலை 7:30 நரேந்திர மோடி மைதானம், அகமதாபாத்
ஏப்ரல் 5 சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பிற்பகல் 3:30 ராஜீவ் காந்தி மைதானம், ஹைதராபாத்
ஏப்ரல் 5 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சென்னை சூப்பர் கிங்ஸ் மாலை 7:30 எம். சின்னசாமி மைதானம், பெங்களூரு
ஏப்ரல் 6 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் மாலை 7:30 ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
ஏப்ரல் 7 ராஜஸ்தான் ராயல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் மாலை 7:30 ஏ.சி.ஏ மைதானம், கவுகாத்தி
ஏப்ரல் 8 டெல்லி கேப்பிடல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் மாலை 7:30 அருண் ஜெட்லி மைதானம், டெல்லி
ஏப்ரல் 9 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மாலை 7:30 ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
ஏப்ரல் 10 ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மாலை 7:30 ஏ.சி.ஏ மைதானம், கவுகாத்தி
ஏப்ரல் 11 பஞ்சாப் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பிற்பகல் 3:30 புதிய பி.சி.ஏ மைதானம், முல்லன்பூர்
ஏப்ரல் 11 சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேப்பிடல்ஸ் மாலை 7:30 எம். சிதம்பரம் மைதானம், சென்னை
ஏப்ரல் 12 லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் பிற்பகல் 3:30 எகானா மைதானம், லக்னோ
ஏப்ரல் 12 மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மாலை 7:30 வான்கடே மைதானம், மும்பை