டெல்லி: காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவர் சோனியா காந்தி உடல்நலக் குறைவால் தலைநகர் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்த நிலையில், சிகிச்சை முடிந்து இன்று (மார்ச் 31) வீடு திரும்பினார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, “உடல் சார்ந்த தொற்று” (systemic infection) பாதிப்பிலிருந்து குணமடைந்ததைத் தொடர்ந்து, புது தில்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையிலிருந்து செவ்வாய்க்கிழமை காலை (மார்ச் 31, 2026) அன்று வீடு திரும்பினார்.
79வயதாகும், நாடாளுமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் சோனியா காந்திக்கு வயது முதிர்வு காரணமாக திடீரென உடல்நிலை பாதிக்கப் பட்டது இதையடுத்து, அவர் கடந்த வாரம் டெல்லி கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிக்சை பெற்று வந்தார். மார்ச் 24, 2026 அன்று இரவு சுமார் 10:20 மணியளவில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்; அங்கு அவர் ஏழு நாட்கள் சிகிச்சையில் இருந்தார்.
சீதோஷண நிலை மாற்றத்தால் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. மேலும், வயிறு மற்றும் சிறுநீா்ப் பாதையில் ஏதேனும் தொற்று உள்ளதா என்பதைக் கண்டறிய மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. சிகிச்சையின் ஒரு பகுதியாக, அவருக்கு நுண்ணுயிர் எதிா்ப்பு மருந்துகள் (ஆன்டிபயாட்டிக்ஸ்) அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், சோனியா காந்தியின் உடல்நிலை முழுமையாக குணமடைந்த நிலையில், சர் கங்கா ராம் மருத்துவமனையில் இருந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, இன்று (மார்ச் 31) வீடு திரும்பினார். மேலும், சோனியா காந்திக்கு தொடர் ஓய்வு மற்றும் வீட்டிலிருந்து சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
சோனியா சிகிச்சை தொடர்பாக மருத்துவமனையின் தலைவர் டாக்டர் அஜய் ஸ்வரூப் அவர்களின் கூற்றுப்படி, அவர் நுண்ணுயிர் எதிர்ப்பி மருந்துகளுக்கு (antibiotics) நல்ல முறையில் குணமளித்தார் என்றும், தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது என்றும் தெரிவித்தார். மேலும், அவர் தற்போது வீடு திரும்பியுள்ளார்; மேலும் அவருக்கான தொடர் சிகிச்சையையும் மருத்துவக் கண்காணிப்பையும் அவர் தனது இல்லத்திலேயே பெற்றுக்கொள்வார் என்றும் கூறினார்.