சென்னை: நோய்களை உருவாக்கும் நச்சு ரசாயனங்கள் சானிட்டரி நாப்கின், டயப்பர்களில் பயன்படுத்துவது குறித்து, மத்தியஅரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டில் பெருகி வரும் புற்றுநோய் உள்பட பல்வேறு நோய்களுக்கு காரணமாக நாம் உண்ணும் உணவு மற்றும் உடைகள் மட்டுமின்றி, நாம் பயன்படுத்தும் பல்வேறு வேதி பொருட்களும் காரணமாக அமைகின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உபயோகப்படுத்தும் டயாப்பார்கள், நாப்கின்களாலும் பல்வேறு நோய்கள் பரவி வருகின்றன.

இந்த நிலையில், பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்கள் மற்றும் குழந்தைகளுக்கான டயப்பர்களில் உள்ள நச்சு ரசாயனங்களுக்குத் தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கில், மத்தியஅரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த பெண் வழக்குரைஞர் எஸ்.சுபத்ரா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் , சானிட்டரி நாப்கின் மற்றும் டயப்பர்களில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் என்னென்ன என்பதைத் தயாரிப்பு நிறுவனங்கள் முழுமையாக வெளியிட வேண்டும். இதற்கான விதிமுறைகளை மத்திய அரசு உருவாக்க வேண்டும்.
டில்லியைச் சேர்ந்த ‘டாக்ஸிக்ஸ் லிங்க்’ என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், இந்தியாவில் விற்கப்படும் முன்னணி நிறுவனங்களின் சானிட்டரி நாப்கின்களில் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் அபாயகரமான ரசாயனங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பெண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வகையில், முற்றிலும் நச்சுத்தன்மையற்ற பொருட்களைக் கொண்டு சானிட்டரி பேட்களைத் தயாரிப்பதை உறுதி செய்ய வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனு, சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இது குறித்து ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மற்றும் ஜவுளித் துறை ஆகிய அமைச்சகங்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். இதற்காக நான்கு வார கால அவகாசம் வழங்கி, வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.
நாப்கின்களில் நச்சு வேதிப்பொருட்கள்:
வண்ணக் காகித நாப்கின்களில், புற்றுநோயுடன் தொடர்புடைய மற்றும் உணவுக்குப் பரவக்கூடிய பிரைமரி அரோமேட்டிக் அமைன்கள் (PAAs) போன்ற நச்சு இரசாயனங்கள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக சூடான அல்லது எண்ணெய் நிறைந்த பொருட்களில் பயன்படுத்தும்போது. சிவப்பு, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற நாப்கின்கள் இந்த அசுத்தங்களை அதிக அளவில் வெளியிடுகின்றன.
சில சானிட்டரி நாப்கின்களில் தாலேட்டுகள் மற்றும் ஆவியாகும் கரிம சேர்மங்கள் (VOCs) போன்ற வேதிப்பொருட்களால் உடல்நல அபாயங்கள் ஏற்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இவை மலட்டுத்தன்மை அல்லது ஹார்மோன் சமநிலையின்மை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும்.
பிரைமரி அரோமேட்டிக் அமைன்கள் (PAAs): ஒரு ஆய்வில், சோதிக்கப்பட்ட நாப்கின்களில் சுமார் 50%, வண்ணங்கள் மற்றும் மைகளில் பயன்படுத்தப்படும் நச்சு அல்லது புற்றுநோயை உண்டாக்கும் PAAs-ஐ வெளியிடுவது கண்டறியப்பட்டது.
நாப்கின்களை உணவு உறைகளாகப் பயன்படுத்துவது (எ.கா., சிற்றுண்டி அல்லது கேக்) நச்சு இரசாயனப் பரவலுக்கு வழிவகுக்கும். நாப்கின்களில் கன உலோகங்கள், வெளுக்கும் பொருட்கள் மற்றும் உணவுடன் தொடர்பு கொள்ளக் கூடாத பசைகள் இருக்கலாம்.
இதனால், பெண்களள் உணவைக் கையாளும்போது அடர் நிற அல்லது பிரகாசமான வண்ண காகித நாப்கின்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். அதுபோல சாண்ட்விச்கள் அல்லது பேஸ்ட்ரிகள் போன்ற உணவுப் பொருட்களை மடிக்க நாப்கின்களைப் பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]