பெங்களூரு: மேகதாது அணைக்கு 2 ஆண்டுகளில் பூமி பூஜை நடத்தப்படும் என்றும், அதன்பிறகு, பெங்களுருவில் 30 ஆண்டுகளுக்கு குடிநீர் பிரச்னை இருக்காது கர்நாடக முதல்வர் சித்தராமையா னதரிவித்துள்ளார்.
‘திருத்தப்பட்ட மேகதாது அணை திட்ட அறிக்கையை தயாரித்து வருவதாக கூறிய முதல்வர், இந்த திட்டத்திற்கான செலவு சுமார் ரூ.15,000 கோடி, 600 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த வேண்டி உள்ளது. என்று தெரிவித்தார்.

கர்நாடகா குடிநீர் தேவைக்காக , கர்நாடக மற்றும் தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களுக்கு இடையே செல்லும் காவிரி வழித்தடத்தில் மேகதாது என்ற பகுதியில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது. ஏற்கனே காவிரி காவிரி நதிநீர் பிரச்சினை நூற்றாண்டு காலமாக நீடித்து வந்த நிலையில், பல கட்ட பிரச்னைகளுக்கு பிறகு, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு தற்போது கர்நாடகா நமக்கு தண்ணீர் திறந்து விடுவதை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கண்காணித்து வருகிறது.
இதற்கிடையே காவிரி நதியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை ஒன்றை கட்டுவதற்கு கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது. இந்த அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டில் உள்ள டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக்கி விடும் எனக் கூறி, தமிழ்நாடு அரசு இதனை கடுமையாக எதிர்த்து வருகிறது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், மேகதாது அணைக்கு ம் இரண்டு ஆண்டுக்குள் பூமி பூஜை செய்யப்படும் என்ற நம்பிக்கை இருப்பதாக கர்நாடக அரசு, அம்மாநில சட்டமன்றத்தில் கூறினார்,
கர்நாடக சட்டப்பேரவையில் இது தொடர்பான உறுப்பினரின் கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் சித்தராமையா, பெங்களூரு தெற்கு (ராமநகர்) மாவட்டம் கனகபுரா தாலுகாவில் உள்ள மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்காக முடிவு செய்யப்பட்டுள்ளதால், இதற்கு மேகதாது அணை என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்தஅணை கட்டும் திட்டமானது, பெங்களூரு நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதே நோக்கம் என்றார். தொடர்ந்து இந்த திட்டம் குறித்து பேசிய துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார், பெங்களூருவின் மக்கள் தொகை தற்போது 1.40 கோடியாக உள்ளது. மேகதாது திட்டம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் கர்நாடக மாநிலத்திற்கு ஆதரவாக வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை அளித்துள்ளது. இதற்காக நீதிபதிகளுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நமது நிலத்தில் அணை கட்டுவதற்கு தமிழ்நாடு அரசு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதன் அடிப்படையிலேயே இந்த வழக்கை வாதிட்டு வெற்றி பெற்றுள்ளோம். மேகதாது அணை கட்டப்பட்டால் அடுத்த 25 முதல் 30 ஆண்டுகளுக்கு பெங்களூருவில் குடிநீர் பிரச்சனை இருக்காது. திருத்தப்பட்ட மேகதாது அணை திட்ட அறிக்கையை தயாரித்து வருகிறோம்.
இந்த திட்டத்திற்கான செலவு சுமார் ரூ.15,000 கோடி, 600 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த வேண்டி உள்ளது. மீதமுள்ள நிலங்கள் வனத்துறைக்கு சொந்தமானதாகும். அந்த நிலங்களுக்கு மாற்றாக வனத்துறைக்கு வேறு இடத்தில் நிலம் ஒதுக்கப்படும். இத்திட்டத்தின் மூலம் 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். இந்தத் திட்டத்தில் எனது நிலமும் கூட நீரில் மூழ்குகிறது. என்ன செய்ய முடியும்?
2 ஆண்டுகளில் மேகதாது திட்டத்திற்கு பூமி பூஜை செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு தர வேண்டும்.’ இவ்வாறு அவர் பேசினார்.
[youtube-feed feed=1]