சென்னை: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் விரைவில் குணமடைந் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும்,   பார்லிமென்ட் குழு தலைவருமான சோனியா, (வயது 79) வயது முதிர்வு காரணமாக  உடல் நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார்.  பருவநிலை மாற்றத்தால்  அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுது. எ தற்போது அவர் மருத்துவமனையில்  நலமுடன் இருப்பதாக மருத்துவமனை தலைவர் டாக்டர் அஜய் ஸ்வரூப் தெரிவித்தார்.

மேலும்,  வயிறு மற்றும் சிறுநீர் பாதையில் ஏதேனும் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறியும் மருத்துவ பரிசோதனைக்காக, ஓரிரு நாட்கள் வரை அவர் மருத்துவமனையிலேயே தங்கி இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவுவெளியிட்டுள்ளார். அவரது பதிவில், -காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அறிந்து கவலை அடைந்தேன்..சோனியா காந்தி விரைவில் நலமுடன் திரும்புவார் என நம்புகிறேன், அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்.

இவ்வாறு   குறிப்பிட்டுள்ளார்.

[youtube-feed feed=1]