சென்னை: தங்கம் விலை சவரனுக்கு ரூ.5360 குறைந்து ரூ.1,03,600-க்கு விற்பனைகிறது. இது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.  சென்னையில் இன்று  ஒரு கிராம் தங்கம் ரூ.670 குறைந்து ரூ.12,950-க்கு விற்பனையாகிறது.

தங்கத்திற்கான தேவை மற்றும் அளிப்பு, பணவீக்கம், ரூபாய்-டாலர் மாற்று மதிப்பு போன்ற பல்வேறு காரணிகளால் சென்னையில் தங்கத்தின் விலை நாள்தோறும் ஏற்ற இறக்கங்களுக்கு உள்ளாகிறது. இந்தியாவில் தங்கம் மிகவும் மதிப்புமிக்க ஒரு உலோகமாகக் கருதப்படுகிறது; மக்கள், குறிப்பாகப் பெண்கள், தங்கத்தின் மீது ஆழ்ந்த பற்றுதலைக் கொண்டுள்ளனர். தங்கத்தின் விலையானது சர்வதேச நிலவரத்தை பொருத்து மாற்றம் நிகழும். அதன்படி  எந்தவொரு நாட்டிலும், அனைத்து நகரங்களிலும் தங்கத்தின் விலை நாள்தோறும் மாறிக்கொண்டே இருக்கும்; இதற்கு  இந்தியாவும்  விதிவிலக்கல்ல.

சென்னையில் தங்கத்தின் விலை பல்வேறு காரணிகளால் பாதிக்கப்படுகிறது; இதில் உலகளாவிய சந்தைப் போக்குகளும் அடங்கும். இந்தியக் குடும்பங்களில், தங்கம் மிகவும் விலைமதிப்புள்ளதாகவும், மங்களகரமானதாகவும் கருதப்படுகிறது. அதன் கலாச்சார மதிப்பிற்கு அப்பால், தங்கம் ஒரு சிறந்த முதலீட்டுச் சொத்தாகவும் விளங்குகிறது. இக்காரணங்களினால், சென்னை உட்பட நாடு முழுவதும் தங்கம் பெருமளவில் வாங்கப்படுகிறது. முதலீட்டாளர்கள் தங்கத்தை (physical gold) வாங்குவதோடு மட்டுமல்லாமல், பங்குச் சந்தைகள் வாயிலாகத் தங்கத்தை ஒரு பண்டமாகவும், தங்கம் சார்ந்த வழிப்பொருட்களாகவும் (derivatives) வர்த்தகம் செய்யத் தொடங்கியுள்ளனர்.

பொருளாதாரத்தின் நிலைமை எவ்வாறிருப்பினும், தங்கத்தின் நுகர்வு எப்போதும் குறையாமலே நீடிக்கிறது; இந்தியா முழுவதும் தங்கம் தொடர்ந்து நுகரப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில மாதகளாக ஜெட் வேகத்தில் ஏறிய தங்கம் விலை கடந்த சில  நாட்களாக குறைந்து வருகிறது.  கடந்த வியாழக்கிழமை (மார்ச் 19ந்தேதி)  மட்டுமே சவரனுக்கு ரூ.5,360 வரை குறைந்து நகை பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. தொடர்ந்து  22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.330 குறைந்து ஒரு கிராம் ரூ.13,620க்கும் சவரனுக்கு ரூ.2,640 குறைந்து ஒரு சவரன் ரூ.1,08,960க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய நிலவரப்படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.670 குறைந்து ஒரு கிராம் ரூ.12,950க்கும் சவரனுக்கு ரூ.5,360 குறைந்து ஒரு சவரன் ரூ.1,03,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.235க்கும், ஒரு கிலோ ரூ.2,35,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

[youtube-feed feed=1]