சென்னை: தமிழ்நாட்டில் பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில், கிண்டி சிறுவர் பூங்காவில் உள்ள பறவைகளும் உயிரிழந்து வருவதால், பாதுகாப்பு கருதி, சென்னை கிண்டி சிறுவர் பூங்கா மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் பறவை காய்ச்சல் பரவி வருகிறது. இதன் காரணமாக கோழி உள்பட பறவைகளின் உணவை நன்றாக சமைத்துசாப்பிட அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்த நிலையில், கிண்டி சிறுவர் பூங்காவில் உள்ள நாரைகளில் சுமார் 20 நாரைகள் அடுத்தடுத்து உயிழந்தது. அதற்கு நடத்தப்பட்ட சோதனையில், அவை பறவை காய்ச்சலால் உயிரிழந்தது தெரிய வந்தது. இதையடுத்து, கிண்டி சிறுவர் பூங்கா மூடப்பட்டுள்ளது.
அந்த பூங்கா தற்போது மூடப்பட்டுள்ளது. இதனால் பூங்காவை காண வந்தவர்கள் ஏமாற்றமடைந்தனர். சென்னை கிண்டி சிறுவர் பூங்காவில் ஏராளமான பறவைகள் உள்ளன. இங்கு வேடந்தாங்கலில் இருந்து இனப்பெருக்கம் செய்வதற்காக ஏராளமான வெளிநாட்டு பறவைகளும் வந்துள்ளன.
பொதுவாக வெயில் காலங்களில் கிண்டி சிறுவர் பூங்காவில் உள்ள பறவைகளை வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு பறவைகளை இடமாற்றம் செய்வது வழக்கம். ஆனால் தற்போது பறவை காய்ச்சல் எதிரொலியாக அது போல் பறவைகளை இடமாற்றமும் செய்ய முடியாத நிலை உள்ளது. பறவைகளின் எச்சம், அதன் பாகங்கள், இரக்கைகள், முடிகள் உள்ளிட்டவைகளின் மூலம் வைரஸ் கிருமி மக்களுக்கு தொற்றும் என்பதால் பூங்கா மூடப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]