சென்னை: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். இதுவரை விண்ணப்பிக்காத மாணவ மாணவிகள் இன்று இரவு 9மணிக்குள் விண்ணப்பிக்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இளநிலை மருத்துவ படிப்பு நுழைவுத்தேர்வான நீட் தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த மாதம் 7-ந்தேதி வெளியிடப்பட்டு, விண்ணப்பப்பதிவு பிப்ரவரி 8-ந்தேதி முதல் தொடங்கியது. இது மார்ச் 8ந்தேதியுடன் முடிவடைந்த நிலையில், மாணவர்களின்வேண்டுகோளுக்கு இணங்க 11ந்தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டது. அதன்படி, இன்றுடன் (மார்ச். 1) விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் முடிவடைகறிது.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு ‘நீட்’ தேர்வு மதிப்பெண் அவசியம். அந்த தேர்வில் மாணவ-மாணவிகள் பெறும் மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.
அதன்படி, நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தோ்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
அதேபோன்று, ராணுவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நா்சிங் படிப்புக்கு நீட் தோ்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
அதன்படி, 2026-27-ஆம் கல்வியாண்டுக்கான நீட் தேர்வு வரும் மே 3-ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது.
தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் நடைபெறும் இந்தத் தேர்வுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த பிப். 8 ஆம் தேதி தொடங்கிய நிலையில் இன்றுடன் நிறைவடைகிறது. இரவு 9மணி வரை மட்டுமே ஆன்லைனில் பதிவு செய்ய முடியும். தேர்வு கட்டணம் செலுத்தும் நேரம் இரவு 11.50 வரை மட்டுமே. தாமதமாக வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
விருப்பமுள்ள மாணவா்கள் https://neet.nta.nic.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]