சென்னை: காவல் நிலையத்தில் புகுந்து கல்லூரி மாணவர் ஒருவர் எஸ்.ஐ மீது கல்வீசி தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதல், சென்னை முக்கிய பகுதியான அண்ணாசாலை காவல்நிலையத்தில் அரங்கேறி உளளது.
கல்லூரி மாணவனின் தாக்குதலில் காயம் அடைந்த அண்ணாசாலை காவல் நிலைய சட்டம் ஒழுங்கு பிரிஹவு சப் இன்ஸ்பெக்டர் ராஜன் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்ப்டடார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பான விசாரணையில், காவல்நிலையத்திற்கு புகுந்து தாக்குல் நடத்திய நபர் கல்லூரி மாணவர் என்பதும், இவர் சென்னை எழும்பூர் அருகே உள்ள ஒரு கல்லூரியில் எம்.ஏ படித்து வருபவர் என்பது தெரிய வந்துள்ளது. இவரது சொந்தஊர், கடலூர் மஞ்சக்குப்பம். பெயர் ஹரி பிரசாத் (வயது 22).
இவர் சம்பவத்தன்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் அண்ணா சாலை வழியாக சென்றார். அப்போது அண்ணா சாலை போலீஸ் நிலையம் எதிரே சிறப்பு காவல் ஆய்வாளர் ராஜன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்த சோதனையின்போது, ஹரிபிரசாத் மதுபோதனையில் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவர் மீது குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்ததுடன், அவரது மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, அந்த மாணவனை காவல்துறையினர், மறுநாள் காலையில் வந்து உங்களின் மோட்டார் சைக்கிளை வாங்கிக் கொள்ளுங்கள் என கூறி அனுப்பி வைத்ததாக தெரிகிறது. இதனால் கோபத்துடன் அங்கிருந்து சென்ற ஹரி, மறுநாள் காலை மீண்டும் அண்ணாசாலை காவல்நிலையம் வந்து தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஹரியிடம் இருந்து வாகனத்தை பறித்த சப் இன்ஸ்பெக்டர் ராஜன் உள்ளே இருந்ததை கண்டதும, ஆத்திரம் அடைந்த ஹரி பிரசாத் அருகே இருந்த சிமெண்ட் கல்லை எடுத்து ராஜன் மீது வீசி தாக்குதலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜனுக்கு முகத்தில் கண் அருகே ரத்தக்காயம் ஏற்பட்டது.
இதையடுத்து சக காவலர்கள், ஹரிபிரசாத்தை பிடித்து, கைது செய்ததுடன், சப்இன்ஸ்பெக்டரை மீட்டு, உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனை யில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த சம்பவம் சென்னை காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
[youtube-feed feed=1]