சென்னை:   கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்த்துக்கொண்டிருக்கும், நடப்பாண்டுக்கான  ஐபிஎல் போட்டிகள் விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி, மார்ச் 28 ஆம் தேதி தொடங்கி,  மே 31 ஆம் தேதி முடிக்க  திட்டமிடப்பட்டுள்ளது.

ஐபிஎல் 2026 சீசன்  மார்ச் 26-ந்தேதி தொடங்க இருப்பதாக  ஏற்கனவே அறிவிக்கப்பட்ட  நிலையில்,   தற்போது 2 நாட்கள் கழித்து தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கிடையில், அசாம், தமிழ்நாடு மேற்கு வங்காளம் உள்பட  சில மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறுவதால் அட்டவணை அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் பங்குபெற்றுள்ள, சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், எல்எஸ்ஜி அணிக்கு சொந்தமான மைதானங்களை கொண்ட தமிழ்நாடு, கொல்கத்தா, அசாம் மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால், அதன்பின் போட்டி அட்டவணையை முழுமையாக வெளியிடலாம் என பிசிசிஐ உள்ளது. அதேவேளையில் அணி உரிமையாளர்கள் பகுதி நேர அட்டவணையாவது வெளியிட வேண்டும் என்று வலியுறுத்திய நிலையில், தேர்தல் அறிவிப்பு வெளியானதும் ஐபிஎல் போட்டிக்கான அட்டவனை வெளியிடப்படும் என தெரிகிறது.

[youtube-feed feed=1]