சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரி  சட்டமன்ற தேர்தல்  நடத்துவது குறித்து, ஆலோசனை நடத்திவரும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்வர் தலைமையிலான அதிகாரிகள் இன்று  தமிழக அரசியல் கட்சிகளுடன்  ஆலோசனை நடத்துகிறது.  இன்று (26) மற்றும் நாளை (27) ஆகிய நாட்களில் தமிழ் நாட்டில் இக்குழு தன் ஆய்வு பணிகளை செய்ய திட்டமிட்டுள்ளது.

இந்​திய தலைமைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ்கு​மார்  பிப்ரவரி 25ந்தேதி அன்று தனது குழுவினருடன் சென்னை வந்​தார். அவரதுகுழு நேற்று புதுச்சேரி அரேசியல் கட்சியினர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய நிலையில், இன்று தமிழ்நாட்டில்,   அங்​கீகரிக்​கப்​பட்ட அரசி​யல் கட்சி பிரதி​நி​தி​களை தனித் தனியாகச் சந்​தித்​து, தேர்​தலை வெளிப்​படைத்தன்​மை​யுடன் நடத்​து​வது குறித்து இன்று கருத்து கேட்கிறார்.

தமிழ்நாடு சட்டமன்றத்தின் ஆயுட்காலம் மே மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில், அதற்குள் தேர்தலை நடத்தி புதிய அரசு பதவி ஏற்க வேண்டும். அதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் முன்னெடுத்து வருகிறது. ஏற்கனவே தேர்தல் நடவடிக்கை தொடர்பாக, 1,444 அதி​காரி​கள், 714 பொது பார்​வை​யாளர்​கள், 233 காவல் பார்​வை​யாளர்​கள், 497 செல​வின பார்​வை​யாளர்​கள் நியமிக்​கப்​பட்​டு உரிய பயிற்​சி வழங்​கப்​பட்​டு வருகின்றன.

அதுபோல, தேர்தல் ஆணையஅதிகாரிகள் குழு  பிப்ரவரி 13, 14 தேதி​களில் தமிழகம்  வந்து,   மாவட்ட ஆட்​சி​யர்​கள், எஸ்​பிக்​கள், ஐஜி-க்​கள், வரு​மான வரி, அமலாக்​கத் துறை, சுங்​கத்​துறை அதி​காரி​கள், ராணுவ அதிகாரி​களு​டன் ஆலோ​சனை நடத்​தினர்.

இதன் தொடர்ச்​சி​யாக தேர்​தலுக்​கான முன்​னேற்​பாடு​கள் தொடர்​பாக ஆலோ​சிப்​ப​தற்​காக தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ்கு​மார் தலை​மையி​லான 7 பேர் கொண்ட அதி​காரி​கள் குழு தமிழ்நாடு வருகை தந்துள்ளது.  இந்த குழுவினர் நேற்று புதுச்​சேரி சென்று அங்கு நடை​பெறும் தேர்​தல் முன்​னேற்​பாடு​களை ஆய்வு செய்​தது.

அதனைத் தொடர்ந்து இன்று  தலைமை தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ்கு​மார், சென்னையில் தமிழ்நாட்டில் அங்​கீகரிக்​கப்​பட்ட அரசியல் கட்சி பிர​தி​நி​தி​களு​டன் ஆலோ​சனை நடத்​துகிறார். அப்​போது தேர்தலை நேர்மை​யுடன், வெளிப்​படைத் தன்​மை​யுடன் நடத்​து​வதற்​கான அரசி​யல் கட்​சிகளின் ஆலோ​சனை​களை பெறுகிறார்.

ஒவ்​வொரு அரசி​யல் கட்​சிகளின் பிர​தி​நி​தி​களையும் தனித்​தனியே சந்​தித்து ஆலோ​சனை பெற திட்​ட​மிட்​டிருப்​ப​தாதக தகவல் வெளி​யாகி​யுள்​ளது. அதனைத் தொடர்ந்​து, நாளை (பிப்​.27) மாவட்ட ஆட்​சி​யர்​கள், எஸ்​பி-க்​கள், ஐஜி-க்​களு​டன் ஆலோ​சனை நடத்​துகின்​றனர். அப்​போது, வாக்​குச்​சாவடி மைய ஏற்​பாடு​கள், தேவை​யான பணி​யாளர்​கள், அவர்​களுக்கு வழங்க உள்ள தேர்​தல் பயிற்சிகள், வாக்கு எண்​ணிக்கை மைய ஏற்பாடு​கள், தேர்​தல் பாதுகாப்பு, தேர்​தல் நடத்தை விதி​களை அமல்​படுத்த தேவை​யான காவல்​துறை​யினர் உள்​ளன​ரா, பதட்​ட​மான, மிக​வும் பதட்​ட​மான வாக்​குச்​சாவடிகள், பண விநி​யோகத்தை தடுக்​க​வும், டிஜிட்​டல் பரிவர்த்​தனையை கண்​காணிப்பற்கான திட்​டங்கள் குறித்​தும் ஆலோ​சிக்க உள்​ளனர்.

இந்த ஆலோ​சனைக்குப் பிறகு, தலைமைத் தேர்தல் ஆணை​யர் ​ செய்​தி​யாளர்​களை​யும்​ சந்​தித்து பேசுவார். அதன்பிறகு சில நாட்களில் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

[youtube-feed feed=1]