சென்னை: மார்ச் 24-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு ஜார் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடி, சென்னையில் கடந்த 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, சைவ, வைணவ சமயங்கள் குறித்தும், பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.
இதுசம்பந்தமாக சென்னை மாநகராட்சி கவுன்சிலர் உமா ஆனந்த், சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தனிநபர் புகார் மனுவைத் தாக்கல் செய்தார். அவரது மனுவில், வெறுப்புப் பேச்சு பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான இந்தப் புகாரை விசாரித்து, மதரீதியாக வெறுப்புணர்வை ஏற்படுத்துதல், மத உணர்வுகளைப் புண்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் அவரைத் தண்டிக்க வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.
வழக்கை விசாரித்த சைதை நீதிமன்றம், இந்த புகார் மனு குறித்து, , எம்.பி – எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள ஜார்ஜ் டவுன் மாஜிஸ்திரேட் நீதிபதி விசாரிப்பார் என அங்க அனுப்பி வைக்கப்பட்டது.
இடிதயடுத்துஅங்கு விசாரணை நடைபெற்ற வருகிறது. ஏற்கனனே விசாரணைகள் நடைபெற்றுள்ள நிலையில், அடுத்த விசாரணை நடைபெறும், மார்ச் 24-ம் தேதி பொன்முடி நேரில் ஆஜராக சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொமுடி மீதான மனுவை விசாரித்த நீதிபதி சவுந்திரபாண்டியன், இந்த புகார் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முகாந்திரம் இருப்பதாகக் கூறி, முன்னாள் அமைச்சரான பொன்முடி மார்ச் 24-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளார்
[youtube-feed feed=1]