சென்னை: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. அதன் காரணமாக  தென்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம்தெரிவித்தள்ளது.

இந்திய பெருங்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது  மேலும் வலுவடைந்து, இன்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அடுத்த 2 நாட்களுக்கு, தமிழ்நாட்டில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,  இந்திய பெருங்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது மேலும் வலுவடைந்து இன்றைக்குள் (பிப்ரவரி 20) காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் நாளையும் (பிப்.21), நாளை மறுதினமும் (பிப்.22) தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், ஓரிரு இடங்களில் மணிக்கு 40-60 கிலோமீட்டர் வரையிலான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது

இதன் காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக் கூடும்.

இதே போல நாளை திண்டுக்கல், மதுரை, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதன் பிறகு தமிழ்நாட்டில் பனியின் தாக்கம் சற்று குறைய தொடங்கும் எனவும், வரும் மார்ச் மாதம் முதல் வாரத்திற்குள் பனி முற்றிலுமாக விலகி விடும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பனிக்காலம் விலகிய பிறகு வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரிக்க கூடும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]