சென்னை: சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் இன்று மாமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் ஏராளமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நேற்று சட்டபேரவையில், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில்,முக்கிய அறிவிப்புகள் வெளியாகி இருந்தது. ஆனாலும் இதனை எதிர்க் கட்சிகள் பூஜ்ஜிய பட்ஜெட் என்று விமர்சித்து வருகிறது. இந்த நிலையில், சென்னை மாநகராட்சி இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
• தூய்மைப் பணியாளர்களுக்கு மேலும் 30,000 வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
• 5 பூங்காக்களில் சிறப்பு குழந்தைகளுக்கான உபகரணங்களுடன் Inclusive Parks! ரூ.10 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
• ரூ.20 கோடி மதிப்பீட்டில் 50 விளையாட்டுத் திடல்கள் மேம்படுத்தப்படும்.
• 25 பூங்காக்களில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் நீர் உறிஞ்சும் அமைப்பு (Sponge Park System) அமைக்கப்படும்!
• ரூ.60 கோடி மதிப்பீட்டில் முதற்கட்டமாக 200 பூங்காக்ககளில் அறிவியல் பூர்வமாக தற்காலத்திற்கு ஏற்ற வகையில் புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகை கட்டத்தில் அமைந் துள்ள கூட்டரங்கில் இன்று காலை 10 மணிக்கு பட்ஜெட் கூட்டம் தொடங்கியது. இதில், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்பட அனைத்து கவுன்சிலர்களும் கலந்துகொண்டனர். இதைத்தொடர்ந்து, காலை 11 மணி அளவில் 2026–2027 நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யப்பட்டது. இதில் ஏராளமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
“கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை முன்கூட்டியே வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி.
கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக அரசு எடுத்த பல்வேறு முயற்சிகள் காரணமாக தொழில்துறையில் இந்தியாவின் முன்னில மாநிலமாக தமிழ்நாடு உள்ளது, இது திராவிட மாடல் அரசு செய்த மாபெரும் வெற்றியாகும்.
இந்தியாவின் விளையாட்டு தலைநகராக தமிழ்நாடு மாற உள்ளது.
தகவல் தொழில்நுட்பம் முன்னேற்றம் காணும் வகையில் சென்னை நகரம் முழுவதும் மழைநீர் வடிகால்கள், பூங்காக்கள், உள்ளிட்ட பல்வேறு பணிகள் சிறப்பாக நடைபெற வழிவகை செய்த முதலமைச்சருக்கு நன்றி” என்றார்.
அதில் அவர் துறை வாரியாக 90 அறிவிப்புகளை வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதங்கள் வரும் இருபதாம் தேதி முதல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது பின்னர் விவாதம் முடிந்த பிறகு பட்ஜெட்டுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்படும். பின்னர் தீர்மானங்களாக நிறைவேற்ற வேண்டிய பொருள்களாக எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு சென்னை மாநகராட்சியில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் சுமார் ரூ.8404 கோடி ஒதுக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]