“வாங்குவதில் வேகம்… திருப்பி அளிப்பதில் தேக்கம்! ஏன் ?” என்பதுதான் தற்போது தமிழக அரசியலில் தமிழக வெற்றி கழகம் விருப்ப மனு தொடர்பாக எழுந்துள்ள மில்லியன் டாலர் கேள்வி.
சட்டசபை தேர்தலை முன்னிட்டு, சென்னை பனையூரில் விருப்ப மனு விற்பனை தொடங்கிய முதல் நாளே 10,000 மனுக்கள் “சூடாக” விற்று தீர்ந்தன.

100 ரூபாய்க்கு மனு என்றதும் கூட்டம் கூட்டமாக வந்த தொண்டர்கள் மனுவை வாங்கிய சந்தோசத்தில் விசிலடித்து கொண்டாட்டம் போட்டனர்.
ஆன்லைனில் 40,000 விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டதாகவும், மொத்தம் 50,000 பேர் மனு பெற்றதாகக் கூறப்படுகிறது.
இந்த முனுவை வாங்கும் போது விண்ணப்ப கட்டணம் ரூ. 100 தனி என்றால் அதை பூர்த்தி செய்து திரும்ப ஒப்படைக்கும் போது பொதுப் பிரிவினர் 10,000 ரூபாய், எஸ்.சி., – எஸ். 14., பிரிவினர் 5,000 ரூபாய் விருப்பமனு கட்டணமாக செலுத்த வேண்டும், அதுவும் வரைவோலையாக.
இதுவரை சுமார் 5000 மனுக்களே திரும்ப வந்துள்ளது என்ற போதும் விண்ணப்ப கட்டணம் மற்றும் விருப்பமனு கட்டணம் என கோடிக்கணக்கில் வசூலாகி உள்ளதாகக் கூறப்படுகிறது.
அதேவேளையில், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி குறித்த சர்ச்சையும் எழுந்துள்ளதால், கூட்டணிக்கு யார் தலைமை? துணை முதல்வர் பதவி யாருக்கு?
80-100 தொகுதிகள் காங்கிரசுக்கு சென்றுவிட்டால், நமக்கு என்ன மீறும்?
என்ற கேள்விகள் கட்சி தொண்டர்களிடையே எழுந்துள்ளது, இதனால் “முதலில் கூட்டணி அறிவிக்கட்டும்… பிறகு மனு அனுப்பலாம்” என்ற கணக்கு பலரிடம் இருப்பதாக கூறப்படுகிறது.
தவிர, “என் தொகுதி காங்கிரசுக்கு போயிட்டா?” என்ற சந்தேகமும்,
பல தொகுதிகளில் நிர்வாகிகள் தாங்களே வேட்பாளர் என அறிவித்து சுற்றும் நிலையில், “மனு கொடுத்து பணம் செலவு செய்ய வேண்டாமே!” என்ற மனநிலையும் உருவாகி விட்டதாகக் கூறப்படுகிறது.
வாங்கிய வேகத்தில் மனுக்கள் திரும்பிவராததால் அதிர்ச்சி அடைந்துள்ள தவெக நிர்வாகிகள் மற்றும் தலைவர் விஜய், விருப்ப மனுவுக்கான கடைசி தேதியை பிப். 14ல் இருந்து பிப். 20க்கு மாற்றியுள்ளனர். இதனால் இன்னும் ஓரிரு நாளில் மடை திறந்த வெள்ளமாக மனுக்களும் விருப்ப கட்டணமும் வந்து குவியும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இருந்தபோதும், “கூட்டணி கணக்கு சரியாக வரும்வரை தள்ளிபோடுவதற்காவே” இந்த தேதி நீட்டிப்பு என்று அரசியல் வட்டாரத்தில் முனுமுனுக்கப்படுகிறது.
அதேவேளையில், “உங்கள் சமூக பணி என்ன?”, “கட்சியில் எத்தனை வருடம்?” என்ற கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் திணறும் விஜய் ரசிகர்கள் தாங்கள் வாங்கிய விண்ணப்பங்களை ஒரு பொக்கிஷமாக பாதுகாக்க தயாராகி வருகின்றனர்.
[youtube-feed feed=1]