சென்னை: முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தில் ரூ.178 கோடி 21,35,000 விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர் என வேளாண் பட்ஜெட்டை தாககல் செய்து அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

நிதியமைச்சர் இடைக்கால பொதுபட்ஜெட்டை தாக்கல் செய்து முடித்தும், வேளாண் பட்ஜெட் உரையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வாசித்து வருகிறார்.
வேளாண் பட்ஜெட்டில், “கடந்த 5 வேளாண்மை நிதி நிலை அறிக்கைகளில் வேளாண்மைத் துறைக்கு ரூ. 1,94,076 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தில் ரூ.178 கோடி செலவில் 21,35,000 விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர்.
முதலமைச்சரின் 1,000 உழவர் நல சேவை மையங்கள் திட்டம்!

“முதலமைச்சரின் 1,000 உழவர் நல சேவை மையங்கள் திட்டம் மூலம் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மைப் பொறியியல் பட்டதாரிகள், பட்டயதாரர்களுக்கு 30 % மானியமாக 3 லட்சம் ரூபாய் முதல் 6 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது.
கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் இதுவரை ரூ.707 கோடியில் 61,00,000 விவசாயிகள் பயனடைந்து உள்ளனர்.
தென்னை விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்க வேளாண் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாடு அரசின் நடவடிக்கையால் வேளாண் பரப்பு 3 லட்சம் ஏக்கர் அதிகரிப்பு
ஆதிதிராவிடர், பழங்குடியினர் பிரிவைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு 70% மானியம்!
58,712 ஏக்கர் தரிசு நிலங்கள் விளை நிலங்களாக மாற்றப்பட்டுள்ளன.
2025-26 ஆம் ஆண்டில் முதன்முறையாக, டெல்டா அல்லாத மாவட்டங்களில் கார் / குறுவை / சொர்ணவாரிப் பருவங்களில் நெல் சாகுபடிக்கான ரூ. 115 கோடியில் சிறப்புத் தொகுப்புத் திட்டம்.
நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம் கோயம்புத்தூரில் தொடங்கப்பட்டுள்ளது.
நெல் ஜெயராமன் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்தின் மூலமாக 900 மெட்ரிக் டன் பாரம்பரிய நெல் விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு 70,000 விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளன” என்றார்.
பசுமைக்குடில், நிழல்வலைக் குடில் சாகுபடி ரூ.91 கோடியில் 23,55,000 சதுர மீட்டரில் ஊக்குவிக்கப்பட்டுள்ளது.

எண்ணெய் வித்து பயிர்களின் பரப்பை அதிகரிக்க ரூ.229 கோடி ஒதுக்கீடு. கேழ்வரகு உற்பத்தியில் தமிழ்நாடு நாட்டிலேயே முதல் இடத்தில் உள்ளது. நம்மாழ்வார் இயற்கை வேளாண் மையம் கோவையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது
கடந்த 5 ஆண்டு அதிக எண்ணிக்கையில் வேளாண் இயந்திரம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
2 லட்சம் புதிய இலவச புதிய மின்சார இணைப்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
4150 சூரிய சக்தி பம்பு செட்டுகள் நிறுவப்பட்டுள்ளது.
அனைத்து கிராமங்களிலும் வேளாண் வளர்ச்சி அடைய கலைஞர் வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
10,000 சிறுபாசன குளங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
விரைவில் வேளாண் காடுகள் கொள்கை வெளியிடப்பட உள்ளது.
496 பட்டதாரி இளைஞர்கள், வேளாண் சார்ந்த தொழில்கள் தொடங்க மானியம் வழங்கப்பட்டுள்ளது.
20 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சிறுதானியங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
மதிப்பு கூட்டு பொருள்கள் திட்டத்திற்காக ரூ. 50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சோழவந்தான் வெற்றிலை, பண்ருட்டி பலாப்பழம் உள்ளிட்ட 9 விளைபொருள்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது. மேலும் 32 பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
456 பட்டதாரி இளைஞர்களுக்கு வேளாண் சார்ந்த தொழில் தொடங்க ரூ 4.56 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது.
ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்திற்கு ரூ. 19 கோடி வரை நிதி விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர், பழங்குடியினர் பிரிவைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு 70% மானியம் வழங்கப்படுகிறது.இதன் மூலமாக 17,340 பேர் பயன்பெற்றுள்ளனர். மக்காச்சோளம் சாகுபடி பரப்பு 12 லட்சம் ஏக்கராக உயர்த்தப்பட்டுள்ளது.
ரூ. 44 கோடி செலவில் 134 உழவர் சந்தைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன”
சுவைதாளிதப் பயிர்களான மிளகாய், மஞ்சள், மிளகு, ஏலக்காய், கிராம்பு, ஜாதிக்காய் ஆகியவற்றின் சாகுபடி விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்தில் 12.84 இலட்சம் விவசாயிகள் ரூ.178 கோடி நிதியில் பயன்!
ரூ.78 கோடியில் மக்காச்சோள உற்பத்தி ஊக்குவிப்புத் திட்டம் 1.50 இலட்சம் விவசாயிகள் பயன்.