சென்னை: தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட்டில், மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக கூறியதுடன், தமிழ்நாடு அமைதியான மாநிலமாக திகழ்கிறது என்று கூறினார்.
சட்டசபையில் தமிழ்நாடு அரசின் 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் வருமாறு:
மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.

தமிழ்நாடு அமைதியான மாநிலமாக திகழ்கிறது.
5 ஆண்டுகளில் புதிதாக 43 காவல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

5 ஆண்டுகளில் ரூ.281 கோடியில் தீயணைப்பு வாகனங்கள் & பாதுகாப்புக் கருவிகள்! 37 புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையங்கள்!
கடந்த 5 ஆண்டுகளில் 17318 பேர் புதிதாக காவல்துறையில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு தூதுவர்களாக 4 லட்சம் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.
போதை பொருள்களுக்கு எதிரான கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு தூதுவர்களாக 4 லட்சம் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.
பள்ளி, கல்லூரிகளில் 17,000 போதைப்பொருள் எதிர்ப்பு மன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பால் பண்ணைகள் நவீனமயமாக்கலுக்காக ரூ.758 கோடி செலவிடப்பட்டுள்ளது.
கைத்தறி, கதர் துறைக்கு ரூ.1,943 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விலையில்லா வேட்டி, சேலை திட்டத்திற்கு ரூ.612 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வீட்டுவசதி, நகர்ப்புறத்துறைக்கு ரூ.7,547 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. *
பொதுப்பணித்துறைக்கு ரூ.1,694 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறைக்கு ரூ.17,111 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கு ரூ.11,000 கோடி நிதி ஒதுக்கீடு
மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து நிதி வழங்காத நிலையிலும் ஆசிரியர், அரசு ஊழியர் நலனை காத்து வருகிறோம்.
அரசு பணியில் இருப்பவர் விபத்தில் உயிரிழக்கும் பட்சத்தில் ரூ.1 கோடி வழங்கப்படும்.
ஈட்டிய விடுப்பை சரண்டர் செய்து பணமாக பெறும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் உள்துறை, ம
இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]