சென்னை: தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட்டில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறைக்கு என ரூ.4,282 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதில் கடந்த 4 ஆண்டுகளில் திமுக சார்பில் மேற்கொள்ளப்பட்ட சாதனைகள், நடைபெற்று வரும் பணிகள் மற்றும் 2026-27 நிதியாண்டில் மேற்கொள்ளப்பட உள்ள பணிகள் தொடர்பான விவரங்கள் இடம்பெற்று இருந்தன.
மகளிர் நலன்:
மகளிர் நலன் குறித்துப் பேசிய அவர், “மகளிரின் உரிமையை பாதுகாத்திட அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்திட தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட முத்தான திட்டம் மகளிர் உரிமைத் தொகை திட்டம். இல்லங்களில் மகளிரின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் அவர்களது வங்கிக்கணக்கில் ரூ. 1,000 செலுத்தும் இந்த திட்டம் இந்தியாவிலேயே முன்னோடி திட்டமாக திகழ்கிறது.
1.31 கோடி மகளிர் பயன்பெறும் இந்த திட்டத்தை பிற மாநிலங்கள் பின்பற்றுகின்றன என்பதே இந்த திட்டத்தின் வெற்றியாகும். நாடே போற்றும் இந்த திட்டத்தில் எதிர்வரும் மாதங்களிலும் மகளிர் பயன்பெறும் வகையில் பிப்ரவரி மாதத்துடன் மார்ச், ஏப்ரல் மற்றும் கோடைக்கால தொகுப்பு என ரூ. 5,000 மகளிரின் வங்கிக்கணக்கில் செலுத்தியது தமிழ்நாடே இன்ப அதிர்ச்சியில் உறைந்துபோனது. மக்கள் மகிழ்ச்சி கடலில் திளைத்தனர்.
மேலும் மகளிர் இலவசமாக பயணம் செய்ய விடியல் பயணத் திட்டம் அறிவிக்கப்பட்டது. மகளிர் இதுவரை 881 கோடி முறை பயணம் செய்துள்ளனர். இதனால் மாதம் ரூ. 888 சேமித்துள்ளனர். பெண்களின் உயர்கல்விக்கு உதவிடும் புதுமைப் பெண் திட்டம், 19 தோழி விடுதிகள், கைம்பெண்களுக்கு நல வாரியம் கருவுற்ற பெண்களுக்கு 130 அவரசகால மருத்துவ உதவி மையங்கள் பாதுகாப்பான பிரசவங்களில் தமிழ்நாடு முன்னோடியாக உள்ளது.
மகப்பேறு இறப்பு விகிதம் தமிழ்நாட்டில் குறைவாக உள்ளது. ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் கீழ் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படுகிறது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய காவல் உதவி செயலி அறிமுகம் செய்யப்பட்டது.
ஆன்மிகத்தில் பெண்களுக்கு இடமளிக்கும் வகையில் பெண் ஓதுவார்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். பெண்கள் பெயரில் சொத்துகளை பதிவு செய்தால் ரூ. 10 லட்சம் வரையிலான சொத்துகளுக்கு பத்திரப்பதிவு கட்டணம் 1% குறைக்கப்படுகிறது.
மகளிருக்கு மேலும் வாய்ப்பு வழங்கும் வகையில் மகளிருக்கு இளஞ்சிவப்பு ஆட்டோ திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இவ்வாறு மகளிர் நலனுக்கான அரசாக இந்த அரசு உள்ளது” என்றார்.
இதையடுத்து, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்கு வகிக்கும் தொழில்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்தும், எந்தெந்த மாவட்டங்களில் வலுவான புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன என்பது குறித்தும் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.

தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறைக்கு ரூ.4,282 கோடி நிதி ஒதுக்கீடு
நிதியமைச்சர் பட்ஜெட் உரையின்படி, 2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி எனும் இலக்குடன் இயங்கும் தமிழ்நாடு அரசு, உலக முதலீட்டாளர் மாநாடு, TN-Rising போன்ற முன்னெடுப்புகள் மூலம் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தொழில் முதலீடுகளை மிகப்பெரும் அளவில் ஈர்த்து வருகிறது. அந்த வகையில் 36 லட்சத்திற்கும் மேலான வேலைவாய்ப்புகள் உருவாகும் வகையில், 12.37 லட்சம் கோடி ரூபாய் உறுதி அளிக்கப்பட்ட முதலீடுகளுக்கான 1,179 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளனவாம். அதனை மேலும் அதிகரிக்கும் விதமாக தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறைக்கு 4,282 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
புதிய தொழிற்பூங்காக்கள்
தமிழ்நாட்டில் 2021 ஆம் ஆண்டு வரை 15 மாவட்டங்களில் 32,525 ஏக்கர் பரப்பளவில் 24 சிப்காட் தொழிற்பூங்காக்கள் செயல்பட்டு வந்தது. திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின், மேலும் 12 புதிய மாவட்டங்களில் புதிய தொழிற்பூங்காக்கள் உருவாக்கப்பட்டு, தற்போது 49,468 ஏக்கர் பரப்பளவில் 54 தொழிற்பூங்காக்கள் செயல்பட்டு வருகின்றன. கூடுதலாக 28,392 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. ‘தமிழ்நாடு அறிவுசார் நகரம்’ மற்றும் சென்னைக்கு அருகில் 2,000 ஏக்கர் பரப்பளவில் உலகளாவிய நகரம்’ ஆகிய முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஸ்ரீபெரும்புதூரில் 706 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 18,720 படுக்கை வசதிகள் கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய பணியாளர் விடுதி அமைக்கப்பட்டுள்ளது.
புதிய டைடல் பூங்காக்கள்:
திருச்சி, மதுரை மற்றும் ஓசூர் ஆகிய இடங்களில் மொத்தம் 1,070 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய டைடல் பூங்காக்கள் நிறுவப்பட்டு வருகின்றன. கூடுதலாக விழுப்புரம், தஞ்சாவூர், சேலம், தூத்துக்குடி, திருப்பூர், வேலூர் மற்றும் காரைக்குடி ஆகிய இடங்களில் டைடல் நியோ மினி தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் திறக்கப்பட்டுள்ளன. இவை மட்டுமன்றி, நாமக்கல், திருவண்ணாமலை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, நாகப்பட்டினம், கரூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய இடங்களில் மொத்தம் 388 கோடி ரூபாய் செலவில் மினி தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் நிறுவப்பட்டு வருகின்றன. தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சியை பரவலான முறையில் விரிவுபடுத்துவதன் மூலம், தமிழ்நாடு முழுவதும் 25,500 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
செமி கண்டக்டர் மையம்
‘தமிழ்நாடு செமிகண்டக்டர் இயக்கம் 2030’ எதிர்வரும் ஐந்தாண்டுகளுக்கான செயல்திட்டத்தின் அடிப்படையில், 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இந்திய தொழில்நுட்பக் கழகம், சென்னை (IIT Madras) உடன் இணைந்து சென்னை தரமணி பகுதியில், மேம்பட்ட செமிகண்டக்டர் தொழில்நுட்ப மையம் (Centre for Advanced Semiconductor Technologies) மற்றும் செமிகண்டக்டர் வடிவமைப்பு மற்றும் சோதனைக் கட்டமைப்பு மேம்பாட்டுக்கான திறன்மிகு மையம் (Centre of Excellence) அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
தூத்துக்குடி கப்பல் கட்டும் தளம்
கப்பல் கட்டுமானம் மற்றும் கப்பல் இயந்திர உற்பத்தித் துறைகளில் முதலீடுகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட ‘தமிழ்நாடு கப்பல் கட்டும் கொள்கை’ விரைவில் வெளியிடப்படும்போது, கப்பல் கட்டும் தொழிலில் ஒரு உலகளாவிய மையமாக தமிழ்நாடு உருவெடுக்கும். சிப்காட் நிறுவனம் வ.உ.சிதம்பரனார் (VOC) துறைமுக ஆணையத்துடன் இணைந்து, ஒரு சிறப்பு நோக்க நிறுவனம் (SPV) மூலம் தூத்துக்குடியில் 5,200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு புதிய கப்பல் கட்டும் தொகுப்பினை நிறுவி வருகிறது. கூடுதலாக, ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் ஒரு உலகளாவிய முன்னணி கப்பல் கட்டும் நிறுவனம் உள்ளிட்ட, முன்னணி கப்பல் கட்டும் நிறுவனங்களுடன் சுமார் 30,000 கோடி ரூபாய் மதிப்புள்ள உறுதியான முதலீட்டுப் பொறுப்புறுதியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என அரசின் பட்ஜெட் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.30 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள்:
தூத்துக்குடி துறைமுகம் அருகே சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், 1800 ஏக்கர் பரப்பளவில் உலகத்தரம் வாய்ந்த இரண்டு புதிய கப்பல் கட்டும் மற்றும் பழுதுபார்க்கும் தளங்கள் அமைப்பதற்கான ஒப்பந்தம் கடந்த ஆண்டு கையெழுத்தானது. அதன்படி, கொச்சின் ஷிப்யார்டு மற்றும் மசகான் டாக் ஆகிய நிறுவனங்கள் முறையே தலா 15 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளன. துறைமுகத்திற்கு அருகிலேயே தமிழக அரசு மற்றும் சிப்காட் (SIPCOT) மூலம் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம், நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 55,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கணிக்கப்படுகிறது.
உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பத்துடன், தென் கொரியாவின் HD Hyundai நிறுவனம் போன்ற முன்னணி நிறுவனங்களின் பங்களிப்புடன், 2047-ம் ஆண்டிற்குள் இந்திய கடல்சார் துறையை உலக அளவில் முன்னணியில் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம், தமிழகத்தில் கடலோரப் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. இதையொட்டியே ‘தமிழ்நாடு கப்பல் கட்டும் கொள்கை’ விரைவில் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அரசு பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் இதுவரை, 36 லட்சத்திற்கும் மேலான வேலைவாய்ப்புகள் உருவாகும் வகையில், ரூ. 1,237 லட்சம் கோடி உறுதி அளிக்கப்பட்ட முதலீடுகளுக்கான 1,179 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.
மாநிலம் முழுவதும் தொழில் வளர்ச்சி சமச்சீராகப் பரவும் வகையில் மாவட்டந்தோறும் தொழிற்பூங்காக்கள் அமைக்கப்பட வேண்டும் என்ற நோக்கோடு அரசு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் 2021 ஆம் ஆண்டு வரை 15 மாவட்டங்களில் 32,525 ஏக்கர் பரப்பளவில் 24 சிப்காட் தொழிற்பூங்காக்கள் செயல்பட்டு வந்த நிலையில், இவ்வரசு பொறுப்பேற்ற பின், மேலும் 12 புதிய மாவட்டங்களில் புதிய தொழிற்பூங்காக்கள் உருவாக்கப்பட்டு, தற்போது 49,468 ஏக்கர் பரப்பளவில் 54 தொழிற்பூங்காக்கள் செயல்பட்டு வருகின்றன.
மேலும், கூடுதலாக 28,392 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. ‘தமிழ்நாடு அறிவுசார் நகரம்’ மற்றும் சென்னைக்கு அருகில் 2,000 ஏக்கர் பரப்பளவில் உலகளாவிய நகரம்’ ஆகிய முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
திருப்பெரும்புதூரில் ரூ. 706 கோடி மதிப்பீட்டில் 18,720 படுக்கை வசதிகள் கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய பணியாளர் விடுதி அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு மேற்கொண்ட இத்தகைய முன்னோடி நடவடிக்கைகளின் காரணமாக, தொழில் வளம் பெருகி, 2024-25 ஆம் ஆண்டில் தமிழ்நாடு 11.19 சதவீதம் எனும் இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சியை எட்டி, நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது. மேலும், மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் 41.23 சதவீதம் பங்களிப்புடன் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகவும் தமிழ்நாடு உள்ளது” என்று அமைச்சர் தெரிவித்தார்.
[youtube-feed feed=1]