சென்னை:தமிழ்நாடு இரட்டை இலக்கு பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது என்று கூறிய அமைச்சர் தங்கம் தென்னரசு, இந்தியாவுக்கே தமிழ்நாடு வழிகாட்டி வருகிறது என கூறினார்.
‘தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2026-27ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் வருமாறு…
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற்று புதிய அரசு தேர்வு செய்யப்பட உள்ளது. இதன் காரணமாக நடப்பாண்டு அரசு சார்பில், அனைத்து அரசுத் துறைகளுக்கு மானியக் கோரிக்கைகள் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யும் வகையில் 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. 2021-ம் ஆண்டு மே 7-ந் தேதி பதவி ஏற்ற திமுக ஆட்சியின் கடைசி கூட்டத்தொடர் இதுவாகும். தேர்தலுக்கு பிறகு மே மாதத்தில் அமையும் புதிய ஆட்சியில் மீண்டும் பட்ஜெட் கூட்டத்தொடர் நடத்தப்பட்டு, முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
இன்று காலை பேரவை வழக்கமான நடைமுறைகளுடன் பேரவை நிகழ்வுகங்ள தொடங்கியதை அடுத்து, சட்டசபையில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இடைக்கால பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு வாசித்து முடித்ததும், வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
தமிழ்நாடு இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை அடைய பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்திய முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி என தெரிவித்த அமைச்சர் தங்கம் தென்னரசு
தமிழ்நாட்டில் வறுமையை ஒழிக்கும் இறுதிப் போரை தொடங்கியுள்ளோம்.
ஏற்றுமதியை பெருக்கி, பண வீக்கத்தைக் குறைத்து, உயர்ந்த பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு அடைந்துள்ளது
“ஏற்றுமதி பெருக்கி, பண வீக்கத்தைக் குறைத்து, தொழிலாளர் நலன் காக்கும் பெரும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அதிக நிதி வழங்கப்பட்டுள்ளது;
உணவு உற்பத்தியில் வரலாறு காணாத வளர்ச்சியைப் பெற்றுள்ளோம்;
செயற்கை நுண்ணணுறவு உள்ளிட்ட துறைகளில் இளைஞர்கள் வளர திட்டங்கள் தீட்டப்படும் வகையில் தமிழர் பெருமையைப் பறைசாற்றும் வகையில் பல அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது;
நாட்டிற்கே வழிகாட்டும் வரலாற்றுக் கடமையை நாம் செய்து வருகிறோம்”
சோழர் அருங்காட்சியம், நவாய் அருங்காட்சியம், நொய்யல் அருங்காட்சியம் என்று மொத்தம் ரூ.285 கோடியில் அருங்காட்சியங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
உலகத் தரத்தில் கீழடி மற்றும் பொருநை அருங்காட்சியம் திறந்து வைக்கப்பட்டு பெரிய வரவேற்றை பெற்றுள்ளன.
இந்தியாவுக்கே வழிகாட்டும் வரலாற்று கடமையை நாம் செய்து வருகிறோம்”
மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு வீடுகள் கட்டித் தரும் திட்டத்தில் 10,469 வீடுகள் கட்டுவதற்கு, ரூ.630 கோடி ஒதுக்கப்பட்டு, 6,010 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவை கட்டப்பட்டு வருகின்றன