சென்னை: டெட் தேர்வுக்கு பிப். 18 முதல் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. டெட் தேர்வு ஜூலையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

2026ம் ஆண்டு ஜூலை 4, 5 ஆம் தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு(டெட்) நடைபெறும் என்ற உத்தேச அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. ஜூலை 4 ஆம் தேதி முதல் தாள் தேர்வும், ஜூலை 5 ஆம் தேதி 2 ஆம் தாள் தேர்வும் நடைபெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி அனைத்து வகையான பள்ளிகளிலும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெறவேண்டும். இந்த டெட் தேர்வு மொத்தம் 2 தாள்களை கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2-ஆம் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம்.
தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் டெட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிக்கை இன்று(பிப். 13) வெளியான நிலையில், வரும் பிப். 18 முதல் விண்ணக்கலாம் என்றும் விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 10 ஆம் தேதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுக் கட்டணம் உள்ளிட்ட கூடுதல் விவரங்களை www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
[youtube-feed feed=1]