சென்னை: மற்ற மாநிலங்கள் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளும்போது, தமிழ்நாட்டில் மட்டும் ஏன் ‘தனித்துவம்’ என்ற போலி பிம்பத்திற்கு பின்னால் ஒளிந்து கொள்ள வேண்டும்? சக இந்தியர்களைப் போல், கூட்டணி அரசு அமைவதில் தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி  கூறி உள்ளார்.

 ‘தமிழ்நாட்டுக்கு கூட்டணி ஆட்சி ஒத்து வராது’ என முதலமைச்சர் பேசிய நிலையில், காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி எதிர்வினை  ஆற்றி உள்ளார். கூட்டணி அரசு அமைவதில் தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூறிய கூட்டணியை மக்கள் விரும்ப மாட்டார்கள் என்ற கருததுக்கு காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி  பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி பல ஆண்டுகளாக பயணித்துவரும் நிலையில், சமீப காலமாக ஆட்சி அதிகாரத்தில் பங்கு கோரி காங்கிரஸ் கட்சியை சில முன்னணி நிர்வாகிகள் கருத்து தெரிவித்து வருகின்றன.  இதனால் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.

இந்த சூழலில்,  இந்திய டுடே வட்டமேஜை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்  “தமிழ்நாட்டுக்கு கூட்டணி ஆட்சி ஒத்துவராது” இது காங்கிரசுக்கும் தெரியும் என  பேசியிருந்ததுடன்,  அதே சமயம், காங்கிரஸ் கட்சி உடனான கூட்டணி தொடரும் என்றும் அவர் கூறியிருந்தார்.

முதல்மைச்சர்  ஸ்டாலினின் இந்த கருத்து தொடர்பாக மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் எதிர்வினையாற்றி வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர் பிரவீன் சக்கரவர்த்தி, தனது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்கள் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளும்போது, தமிழ்நாட்டில் மட்டும் ஏன் ‘தனித்துவம்’ என்ற போலி பிம்பத்திற்கு பின்னால் ஒளிந்து கொள்ள வேண்டும்?

சக இந்தியர்களைப் போல், கூட்டணி அரசு அமைவதில் தமிழக மக்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது தமிகத்தில் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானது. மேலும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது தனித்துவமான விஷயம் அல்ல.

ஜார்க்கண்ட், கேரளா, பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கூட்டணி அரசு இருக்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

[youtube-feed feed=1]