சென்னை: தி.மு.க-தான் காங்கிரஸிடம் அடிமையாக உள்ளது என கூறிய எடப்பாடி பழனிச்சாமி,  விஜய் முதலில் தேர்தலை சந்திக்கட்டும் என தெரிவித்தார்.

சென்னையில் நடக்கும் இந்தியா டுடே கருத்தரங்கில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி  கலந்துகொண்டார்.  அங்கு பேசும்போது,  தேசிய ஜனநாயக கூட்டணியில், ஆட்சியில் பங்கு என்ற பிரச்னையே இல்லை. கூட்டணியில் இருப்போரும் அவ்வாறு கேட்கவில்லை. நாங்கள் கூட்டணி அமைத்தால் அடிமை என சொல்கிறார்கள். ஆனால், திமுகதான் காங்கிரஸிடம் அடிமையாக இருக்கின்றது என்றார்.

சென்னையில் நடந்த இந்தியா டுடே கருத்தரங்கில் பங்கேற்று பேசிய அவர், அ.தி.மு.க.விலும் திராவிட மாடல் இருக்கிறது. அதனால்தான் அ.தி.மு.க வலுவாக இருக்கிறது. அ.தி.மு.க மட்டும் இலவசம் தரவில்லை. நாடு முழுவதும் இலவசம் அறிமுகம் ஆகி உள்ளன. தி.மு.க. அளித்த வாக்குறுதிகளில் 4ல் ஒருபங்கை கூட முழுவதுமாக நிறைவேற்றவில்லை. இதனால்தான் நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் குறித்து வெள்ளை அறிக்கை கேட்கிறோம். இதுவரை தரப்படவில்லை.

கடன் வாங்குவதில் இந்தியாவில் நம்பர் 1 மாநிலம் என்ற நிலையில் தமிழகம் உள்ளது. உதயநிதியை துணை முதல்வர் என திமுகவினர் ஏற்கலாம். ஆனால் மக்கள் ஏற்கவில்லை. கருணாநிதி குடும்பத்தில் பிறந்ததால்தான் அவருக்கு துணை முதலமைச்சர் பதவி கிடைத்தது. பொது விவாதம் நடத்த ஸ்டாலின் எங்கே அழைத்தாலும் நான் தயார். ஸ்டாலின் உடன் ஒரே மேடையில் பொது விவாதம் செய்ய நான் தயாராக இருக்கிறேன்.

ஊரின் பெயரை எனது பெயருக்கு முன்னாள் போட்டுக்கொள்ளுங்கள் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறினார். அவர் கூறியதால்தான் எடப்பாடியை பெயருக்கு முன்னாள் சேர்த்துள்ளேன். தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. நாங்கள் தெளிவாக உள்ளோம். அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெற வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர்.

தி.மு.க. ஆட்சியில் மக்கள் துன்பத்தை அனுபவிக்கின்றனர். அதனால் அ.தி.மு.க.விற்கு வெற்றி கிடைக்கும். முதல்வரின் கணக்கு எதுவாக இருந்தாலும், மக்களின் கணக்கு அ.தி.மு.க வெற்றி பெற வைப்பது தான். நானும் முதல்வரும் ஒரே நேரத்தில் தேர்வு செய்யப்பட்டோம். என் வழி வேறு. ஸ்டாலின் வழிவேறு. அவரது தந்தை முதல்வராக இருந்ததால் அவருக்கு விளம்பரம் கிடைக்கிறது. நான்தான் முதல்வர் வேட்பாளர் என்பதை தெளிவுபடுத்திவிட்டார்கள். அதிமுக தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சி அமைக்கும்.

தி.மு.க தான் காங்கிரசின் அடிமையாக இருக்கிறது. அ.தி.மு.க எந்த விதத்தில் அடிமையாக உள்ளது. பா.ஜ.க.விடம் அ.தி.மு.க.வை அடகு வைக்கவில்லை. 2024-ல் அ.தி.மு.க தான் தனித்துப் போட்டியிட்டது. தி.மு.க. காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்தது. சசிகலா, பன்னீர்செல்வம் பிரச்னை முடிந்தபோன ஒன்று. அவர்கள் குறித்து எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை. அ.தி.மு.கவில் அவர்களுக்கு இடமில்லை. தினகரன் உடன் இருந்தது கருத்து வேறுபாடுதான். தற்போது அது சரியாகிவிட்டது.

விஜய்க்கு ஆல் தி பெஸ்ட் என எப்படி சொல்லமுடியும். அவரை தேர்தல் களத்தில் சந்திப்போம். வலிமையான பாரதம் வளமான பாரதம் உருவாக இளைஞர்கள் துணை நிற்க வேண்டும். சினிமாவில்தான் விஜய் சூப்பர் ஸ்டார். அரசியல் சூப்பர் ஸ்டார் அல்ல. எம்.ஜி.ஆர் பெயரைச் சொன்னால் தான் கட்சி நடத்த முடியும். அதனால்தான் எம்.ஜி.ஆர் பெயரை விஜய் பயன்படுத்துகிறார். த.வெ.க. ஒரு தேர்தலை கூட சந்திக்கவில்லை. சந்தித்தால்தான் எவ்வளவு ஓட்டு கிடைக்கும் என தெரிய வரும். இவ்வாறு அவர் கூறினா

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது,  த.வெ.க ஒரு தேர்தலைக்கூட சந்திக்கவில்லை. தேர்தலைச் சந்தித்தால்தான் அவர்களுக்கு எவ்வளவு வாக்கு உள்ளது என கணிக்க முடியும். விஜய் திரையில்தான் சூப்பர்ஸ்டார், ஆனால் அரசியலில்?, எம்.ஜி.ஆர் பெயரை சொன்னால்தான் கட்சியே நடத்த முடியும் என்ற நிலை உள்ளது. சென்னையில் நடக்கும் இந்தியா டுடே கருத்தரங்கில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தவெக குறித்த கேள்விக்கு  பதிலளித்தார்.

[youtube-feed feed=1]