சென்னை: அமைச்சர் துரைமுருகன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளது. இது திமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த முதல்வர் ஸ்டாலின் அதிகாலையிலேயே மருத்துவமனை சென்று துரைமுருகன் உடல்நலம் விசாரித்தார்.

தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகனுக்கு தற்போது 87 வயது ஆகிறது. வயது முதிர்வு காரணமாக அவருக்கு அவ்வப்போது உடல்நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், இன்று மீண்டும் உடல்நலம் பாதிப்பு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அமைச்சர் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், சிறிது நாட்கள் ஓய்வில் இருக்க அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
துரைமுருகன் கால்வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளன்ர்.
துரைமுருகனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை விடுத்திருக்கும் அறிக்கையில், கால் வலிக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும், சில நாட்கள் மருத்துவமனையில் அவர் ஓய்வெடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
[youtube-feed feed=1]