சென்னை: தமிழ்நாட்டில் பறவை காய்ச்சல் பரவி வருவதால், பொதுமக்கள் அசைவங்களை தவிர்க்கவும், குறிப்பாக கோழிமுட்டையின் ஹாஃப் பாயில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் ரூ. 8 கோடி மதிப்பிலான இருதய வடிகுழாய் ஆய்வகம் Cardiac cath Lab மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இதை திறந்து வைத்தார் அமைச்ச்ர மா.சுப்பிரமணியன்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் , தமிழகத்தில் பறவைக்காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது. மனிதர்கள் யாருக்கும் பாதிப்பு இல்லை.
பறவைக்காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹாஃப் பாயில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.இறைச்சியை நன்கு வேக வைத்து சாப்பிடுவது அவசியமாக மாறி உள்ளது. இறந்த கோழியை உண்ண வேண்டாம்.காகம், கோழி போன்ற பறவைகள் உயிரிழந்தால் அவற்றை ஆழமாக குழிதோண்டி புதைக்க வேண்டும்,” கோழி திடீரென இறந்தால், அதனை சமைத்து சாப்பிட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும், மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதற்காக மேற்கண்டவை அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு தெரிவித்தார்.
[youtube-feed feed=1]