டெல்லி: திருப்பரங்குன்றம் மலையின் ஒரு பகுதியில் அமைந்துள்ள சிக்கந்தர் தர்காவில்,  தினசரி தொழுகை, விலங்குகள் பலியிட தடை விதித்த சென்னை  உயர் நீதிமன்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

தமிழ்நாட்டின் திருப்பரங்குன்றம் மலைகளில் அமைந்துள்ள தர்காவில் தொழுகை நடத்துவதை தடைசெய்த சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை உறுதி செய்தது, முஸ்லிம்கள் அந்த இடத்தில் தினசரி பிரார்த்தனை செய்ய முடியாது என்று கூறியது. ‘மிகவும், மிகவும் சமநிலையானது’: தீபம் ஏற்றும் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

மதுரையை அடுத்த திருப்பரங்குன்றம் மலையில் சுப்பிரமணியம் சுவாமி கோயிலும், மலை உச்சியின் ஒரு பகுதியில்  சிக்கந்தர் தர்ஹாவும் உள்ளன. சிக்கந்தர் தர்ஹாவில் சந்தனக் கூடு விழாவையொட்டி ஆடு, கோழிகளை பலியிட்டு கந்தூரி விழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். ஆனால், வழக்கமாக நடைபெறும் இந்த விழாவுக்கு இந்து அமைப்புக்கள் கடந்த ஆண்டு எதிர்ப்பு தெரிவித்தன. அதையும் மீறி பலியிடுவதற்காக ஆடுகளை எடுத்துச் செல்ல முயன்றதாக இஸ்லாமிய அமைப்பினரை காவல் துறை தடுத்து நிறுத்தியது.

இந்த நிலையில், திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, மாடு, கோழி பலியிட தடை கோரி பல்வேறு மனுக்கள் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்யப்பட்டன. மேலும், ராமலிங்கம் என்பவர் நெல்லித்தோப்பு பகுதியில் முஸ்லிம்கள் தொழுகை நடத்த தடை விதிக்க வேண்டும் என கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு மாறுப்பட்ட தீர்ப்பை வழங்கினர். நீதிபதிஜெ.நிஷா பானு, இந்து அமைப்புகளின் மனுவை தள்ளுபடி செய்ததுடன், அங்கு ஆடு கோழி பலியிடலாம் என அனுமதி வழங்கியிருந்தார். அவரது தீர்ப்பு ஒருதலைப்பட்சமாக அவரை சார்ந்த மதத்தினருக்கு ஆதரவாக இருந்தது. இது சலசலப்பை ஏற்படுத்தியது.

  இதையடுத்து வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமார், திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி, பலியிட தடை விதித்த நீதிபதி எஸ்.ஸ்ரீமதியின் தீர்ப்பை உறுதிப்படுத்தினார். மேலும், ரம்ஜான் மற்றும் பக்ரீத் ஆகிய இரண்டு நாட்களில் மட்டுமே தொழுகை நடத்த அனுமதி அளித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவையும் உறுதி செய்தார்.

இந்த  உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்தும், அதை  ரத்து செய்யக் கோரி இமாம் ஹுசைன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் வரலே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், “நெல்லித்தோப்பு பகுதி இஸ்லாமியர்களுக்கு சொந்தமானதாக இருக்கும் போது அங்கு தொழுகை நடத்த அனுமதி மறுப்பது ஏற்புடையதல்ல. தொழுகை நடத்துவதால் அங்கு சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டதில்லை” என வாதிட்டார்.

அப்போது நீதிபதிகள், சட்டம் ஒழுங்கு பிரச்சனை இருந்ததால் தான் அதிகாரிகள் முன்னிலையில் இருதரப்பு கூட்டம் போடப்பட்டது என்றனர். தொடர்ந்து இரு தரப்பினரும் தங்களது வாதங்களை முன்வைத்தனர். தொடர்ந்து நீதிபதிகள், இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவு சமநிலையோடு இருக்கிறது. அதில் தலையிட வேண்டிய எந்த அவசியமும் இல்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதன் மூலம் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ரம்ஜான் மற்றும் பக்ரீத் போன்ற பண்டிகை நாள்களில் மட்டுமே தர்ஹாவில் தொழுகை நடத்த முடியும். அதே போன்று மலையில் விலங்குகள் பலியிட முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம்! நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டது செல்லும் என உயர்நீதிமன்றம் அமர்வு தீர்ப்பு…

[youtube-feed feed=1]